முகப்பு
தினமணி கதிர்

திரைக் கதிர்

சாய் பல்லவி தற்போது தெலுங்கில் "லவ் ஸ்டோரி' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தினமணி கதிர்

திரைக் கதிர்

சாய் பல்லவி தற்போது தெலுங்கில் "லவ் ஸ்டோரி' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:22 PM
பகிர்:

சாய் பல்லவி தற்போது தெலுங்கில் "லவ் ஸ்டோரி' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த சில நாட்களாக பல படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் "லவ் ஸ்டோரி' படப்பிடிப்பில் மொத்தம் 15 பேர் மட்டுமேதான் கலந்து கொள்கிறார். 

மீபகாலமாக தமிழ் சினிமாவின் சில பிரபலங்கள் ஹிந்திக்கு எதிரான டி- ஷர்ட் அணிந்து கொண்டு படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறனும் தனது மகனுடன் அந்த  டி-ஷர்டை அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது சமூக வலை
தளங்ளில் வைரலாகி வருகின்றது.

"வாடிவாசல்' படத்தில் சூர்யாவுடன் முதல் முறையாக ஆண்ட்ரியா ஜோடியாக நடிக்க உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே ஆண்ட்ரியா,  வெற்றிமாறனின் "வட சென்னை' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிகர் போஸ் வெங்கட்  இயக்கிய படம் "கன்னி மாடம்'. இந்தப் படம்  கனடா டொரண்டோவில் நடைபெற உள்ள தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை "கன்னிமாடம்' படக்குழு உறுதிப்படுத்தி உள்ளது.

கிரீன் இந்தியா சேலஞ்சின் அடுத்த கட்டமாக ஹைதராபாத் அருகில் உள்ள காஜிபல்லி அர்பன் காட்டில் 1650 ஏக்கரை தத்தெடுத்துள்ளார் பாகுபலி புகழ் பிரபாஸ். அந்தக் காட்டின் நலனுக்காக 2 கோடி ரூபாய் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
 

"புதுப்பேட்டை', "வெண்ணிலா கபடி குழு', "அசுரன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நிதிஷ் வீரா. "அசுரன்' படத்தின் தெலுங்கு பதிப்பிலும் அதே கேரக்டரில் நிதிஷ் வீரா நடிக்கிறார். தற்போது அவருக்கு  "ஸ்டைலிஷ்' நடிகராக
வும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம்.

ன்ஸ்டாகிராமில் 15.4 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று ரகுல் ப்ரீத் சிங் முதலிடத்தில் உள்ளார். அவருக்கடுத்து தற்போது காஜல் அகர்வாலும் 15 மில்லியன் ஃபாலோயர்களைக் கடந்துள்ளார். இவருக்கடுத்து 14.7 மில்லியன் ஃபாலோயர்களுடன் ஸ்ருதிஹாசன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

காமெடி நடிகர் கொட்டாச்சி "வலியும் வழியும்' எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர்களின் போராட்ட வாழ்க்கையை, சில உண்மைகளுடன் பதிவு செய்திருப்பதாக கொட்டாச்சி கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →