பேல்பூரி
ஆட்டோவிற்குத் தேவைபோதிய இடைவெளி...நாட்டிற்குத் தேவை, சமூக இடைவெளி.
தினமணி கதிர்பேல்பூரி
ஆட்டோவிற்குத் தேவைபோதிய இடைவெளி...நாட்டிற்குத் தேவை, சமூக இடைவெளி.
கண்டது
(விழுப்புரம் அருகே உள்ளஒரு கிராமத்தின் பெயர்)
ஒரு கோடி
பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
(இராமநாதபுரம் பட்டணம்காத்தானில் உள்ளஓர் உணவகத்தின் பெயர்)
5 1/2 பெட்டி
நா.ஆமினத்து ஜாக்ரினா, கீழக்கரை .
(வேதாரண்யம் மேல வீதியில் ஓர் ஆட்டோவில் எழுதியிருந்த வாசகம்)
ஆட்டோவிற்குத் தேவைபோதிய இடைவெளி...
நாட்டிற்குத் தேவை, சமூக இடைவெளி.
வி.கார்த்திகை குமார், வேதாரண்யம்.
கேட்டது
(கரூர் பைபாஸ் ரோட்டில் இருவர்)
""என்ன மாப்ள... பாரின்ல இருந்து வந்து 4 மாசம் ஆகுது. மாமாவுக்கு ஏதும் கொண்டு வந்தீயா?''
""கொண்டு வந்தேன். நீங்க தான் வாங்கிக்க வரவே இல்லை''
""என்ன கொண்டு வந்தே?''
""கரோனா''
""நீ ஒரு விவகாரமான ஆளுய்யா''
சிவம், திருச்சி
(திருச்சி மருத்துவமனை அருகே இருவர்)
""லாக் டவுன் காலத்துல தினமும் வாக்கிங் போனேன்''
""உடம்புக்கு நல்லதுதானே?''
""எது நல்லது... வீட்டுல இருந்து ஆபிசுக்கு 10 கி.மீ. , ஆபிசில இருந்து வீட்டுக்கு 10 கி.மீ. தினமும் நடந்தேன்''
""கவலைப்படாதீங்க... டாக்டர் செலவு உங்களுக்கு மிச்சம்''
அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
யோசிக்கிறாங்கப்பா!
எந்த ஒரு தெளிவில்லாத
வினாவிற்கும் சிறந்த
விடை "மௌனம்'!
எந்த வித சூழ்நிலைக்கும்
சிறந்த எதிர்வினை
"புன்னகை'!
எல்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி- 1
மைக்ரோ கதை
பத்தாவது மாடியில் பத்துமணிக்கு ஒரு நேர்காணல். லிப்ட்டுக்கு வெளியே பலரும் காத்திருந்தனர். இடம் நிறைந்து லிப்ட் மூடப்போகும் நேரத்தில், கையை உள்ளே நுழைத்தார் ஒரு பெண்மணி.
""நான் எட்டாவது மாடியிலிருக்கும் கணவருக்கு இந்த மருந்துகளைக் கொண்டு போகணும். தயவுசெய்து யாராவது இடம் கொடுங்கள்'' என்று கெஞ்சியும் எவரும் வெளியேறவில்லை.
உடனே, நேர்காணலுக்காக வந்திருந்த ஓர் இளம்பெண், ""அம்மா... நீங்க வாங்க. நான் நடந்து போய்க்கிறேன்'' என்று "லிப்ட்'டிலிருந்து வெளியேறி இடம் கொடுத்தாள்.
மணி 10.15. பத்தாவது மாடியை நடந்தே வந்தடைந்தாள்அந்த இளம்பெண். இண்டர்வியூ முடிந்துவிட்டதாகவும், எல்லாரையும் போகச் சொல்லிவிட்டதாகவும் செய்தி வந்ததும் முணுமுணுத்தபடி கூட்டம் கலைந்தது.
அப்போது, கவலையுடன் நின்றிருந்த அந்த இளம் பெண்ணை, எட்டாவதுமாடிக்கு "லிப்ட்' கேட்ட பெண்மணி அழைத்தார்.
""செவிலியர் பணிக்குப் பொருத்தமான நபர் நீதான்''
என்று பெருமிதத்துடன் சொல்லி அவள் பெயர், முகவரி போன்ற விவரங்களைக் கேட்டு, அவளுக்குப் பணி ஆணையை டைப் செய்யும்படி அங்கிருந்த உதவியாளருக்கு ஆணையிட்டார் அந்த தலைமை மருத்துவர்.
பூபதிபெரியசாமி, புதுச்சேரி-9
எஸ்.எம்.எஸ்.
வாழ்க்கை என்பது ஐஸ் க்ரீம் மாதிரி...
டேஸ்ட் பண்ணினாலும் கரையும்...
வேஸ்ட் பண்ணினாலும் கரையும்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.