முகப்பு
தினமணி கதிர்

திரைக்கதிர் 

தமிழில் அஜித் நடித்து 2019- ஆம் ஆண்டு வெளிவந்த "நேர்கொண்ட பார்வை' படத்தை தெலுங்கில் "வக்கீல் சாப்' என ரீமேக் செய்து வருகிறார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

தமிழில் அஜித் நடித்து 2019- ஆம் ஆண்டு வெளிவந்த "நேர்கொண்ட பார்வை' படத்தை தெலுங்கில் "வக்கீல் சாப்' என ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. ட்ரெய்லருக்கு பவன் ரசிகர்கள் அமோக வரவேற்பைத் தந்துள்ளார்கள். ஒரு வாரத்திற்குள்ளாகவே 34 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. 
 

பூர்வீகம் தமிழ்நாடாக இருந்தாலும் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர் நயன சாய். கன்னடத்தில் "ஒம்பதானே ஆடுபுதா' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்போது அவர் தமிழுக்கு வருகிறார். இன்னும் பெயர் வைக்காத படத்தில் திருநெல்வேலி பெண்ணாக நடிக்கிறார்.

நடிகர் ஆர்.கே.சுரேஷ் இயக்குநராகிறார். "குருபூஜை' என்ற படத்தை விரைவில் இயக்கவிருக்கிறார். இது பழம்பெரும் தலைவர் முத்துராமலிங்கத் தேவரின் 
தொண்டர் ஒருவரின் கதையாக உருவாக இருக்கிறதாம். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 

Advertisement

"பாபநாசம்' படத்தில் கமலின் மகளாக நடித்தவர் எஸ்தர் அனில். தற்போது வெளியான "த்ரிஷ்யம்-2' - இல் நன்கு வளர்ந்த இளம் பெண்ணாகக் காட்சியளிக்கும் இவர், கதாநாயகியாகவும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சோஷியல் மீடியா பக்கத்திலும் பரபரப்பாக இருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் "அந்தகன்' படத்தை, அவரது தந்தை தியாகராஜன் இயக்குகிறார். இப்படத்தில் நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனியும் ஒப்பந்தமாகி உள்ளார். அவர் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறாராம்.

படத்திற்கு படம் அதிரடி காட்டி வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தெலுங்கில் "ரிபப்ளிக்' என்ற அரசியல் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை  தேவ் கட்டா 
என்பவர் இயக்கி வருகிறார். இதில் ரம்யா கிருஷ்ணன் விசாக வாணி என்ற ஓர் 
அரசியல்வாதியாக கலக்கியிருக்கிறாராம்.

தமிழில் "குட்டி ஸ்டோரி' , தெலுங்கில் "பிட்டா கதாலு' ஆகிய வெப் சீரிஸ்களில் நடித்தவர் அமலா பால். தற்போது மற்றுமொரு வெப் சீரிஸில் நடிக்கிறார். இது சயின்ஸ் பிக்ஷன் கலந்த த்ரில்லர் வெப்சீரிஸாக உருவாகிறது. பவன் குமார் இயக்குகிறார். 8 எபிசோடுகளைக் கொண்ட இந்த தொடரில் அமலா பால் அமர்க்களப்படுத்தியுள்ளாராம்.

ஹைதராபாத்தை சேர்ந்த சுமா என்ற எம்.பார்மசி மாணவி, தான் கல்லூரி தேர்வுக்கு ரூ. 83 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், சமீபத்தில் வேலையை இழந்ததால் தன்னால் அந்த தொகையைச் செலுத்த முடியவில்லை என்றும் அதனால் தனக்கு உதவி செய்யுமாறும் சுட்டுரையில் கேட்டிருந்தார்.அவருக்கு காஜல் அகர்வால் பண உதவி செய்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இவரை நான் திருமணம் செய்துகொள்ளலாமா?' என ரசிகர்களிடம் ரைசா கேட்டுள்ளார். அதாவது 45 நாய்களை தத்தெடுத்து, அவற்றுக்காக 4 ஏக்கர் நிலத்தை வாங்கி விளையாடவிட்ட மனிதரைத்தான் திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளாராம் ரைசா. "அதற்கென்ன தாராளமாக செய்து கொள்ளுங்கள் என கமெண்ட் செய்துள்ளார்கள்' ரசிகர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments