தினமணி கதிர்

திரைக்கதிர்

DIN

திரையுலகில் முன்னணி நடிகையான தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் தமன்னாவுக்கு கடந்த டிசம்பர் மாதம் கரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் தொற்றில் இருந்து விடுபட்டு பூரண குணம்அடைந்துவிட்ட போதிலும் உடல் மெலிந்து காணப்பட்டார். இதனால் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்தார். பொதுவாக நடிகைகள் தங்களது உடலைக் கட்டுகோப்பாக வைத்திருப்பார்கள். 

அதிலும் நடிகை தமன்னா ஒரேமாதிரியான உடல் கட்டமைப்போடுதான் இருப்பார். இதையடுத்து தன் மெலிந்த உடலை மெருகேற்ற தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு பழைய தோற்றத்தை மீட்டெடுத்துள்ளார். தமன்னா டிசைனர் உடையில் அசத்தும் இப்போதைய புகைப்படங்கள் இணையதளங்களைக் கலக்கி வருகின்றன.

-----------------------------------------

சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகர் வடிவேலு வெப் தொடர் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தெலுங்கில் பிரபலமாக இருக்கும் ஓடிடி தளம் "ஆஹா'. இந்நிறுவனம் விரைவில் தமிழகத்தில் அறிமுகமாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கை போலவே தமிழிலும் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடங்க பல்வேறு தமிழ் திரை பிரபலங்களை"ஆஹா' நிறுவனம் அணுகி உள்ளது. அந்த வகையில் நடிகர் வடிவேலுவிடம் தங்கள் ஓடிடிக்காக காமெடி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்க கோரி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இறுதியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் வடிவேலு சம்மதம் தெரிவித்து சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

-----------------------------------------

"அழகன்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா. இதில் மம்முட்டி, பானுப்ரியா மற்றும் கீதா ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். இதையடுத்து 1992-ஆம் ஆண்டில் வெளியான மணிரத்னத்தின் "ரோஜா' படம் மதுபாலாவை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்றது. பின்னர் இயக்குநர் ஷங்கரின் "ஜென்டில்மேன்' படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பல வாய்ப்புகள் குவிந்தன. 1999-ஆம் ஆண்டு மதுபாலாவுக்குத் திருமணம் நடந்தது. இவர் நடிகை ஹேமமாலினியின் உறவினரான ஆனந்த ஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அமேயா, கீயா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மதுபாலா தனது மகள்களுடன் இருக்கும் படத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், "மகள் நடிக்க வரும் அளவுக்கு வளர்ந்தும் இளமையான அம்மாவாகவே இருக்கிறீர்கள்' என்று கமெண்ட் போட்டுவருகின்றனர்.


-----------------------------------------


விஜய் சேதுபதி நடிப்பில் உருவான "துக்ளக் தர்பார்', "லாபம்' உள்ளிட்ட பல படங்கள் ரிலீசுக்குத் தயாராக உள்ளன. இதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது கமல் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் "விக்ரம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். இவர் தனது அப்பாவுடன் இணைந்து     "நானும் ரவுடிதான்', "சிந்துபாத்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் "மானாட மயிலாட' நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற கோகுலுடன் இணைந்து சண்டைப் பயிற்சியில் சூர்யா ஈடுபடுகிறார்.அதில் கோகுலுடன் சூர்யா சண்டையிடும் காட்சிகள் உள்ளன. அப்பாவை மிஞ்சும் அளவுக்கு உள்ள இந்த வீடியோவை கோகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

-----------------------------------------

களவாணி' படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா,"மெரினா', "கலகலப்பு', "மதயானைக்கூட்டம்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா பங்கேற்றார். சினிமாவை விட இந்நிகழ்ச்சியின் மூலம்தான் பிரபலமானார். சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் தற்போது ஒரு வெப் தொடரில் நடித்தார். ஓவியா, சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஓவியாவா இது என்று கூறும் அளவுக்கு உடல் மெலிந்து, ஒல்லியான தோற்றத்தில் காணப்படுகிறார். ஓவியா எப்போதுமே மெலிதான உடலமைப்பு கொண்டவர் தான். ஆனால், அவரின் தற்போதைய தோற்றத்தில் மிகவும் ஒல்லியாகக் காட்சியளிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT