திரைக் கதிர்
தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்த "கிராக்' கடந்த வாரம் வெளியானது. படம் பெரிய வெற்றியைப் பெற்று வசூலை அள்ளி வருகிறது. இதில் ஸ்ருதிஹாசன் 6 வயது மகனுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்த "கிராக்' கடந்த வாரம் வெளியானது. படம் பெரிய வெற்றியைப் பெற்று வசூலை அள்ளி வருகிறது. இதில் ஸ்ருதிஹாசன் 6 வயது மகனுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
----------------------------------------------------------------
அஜித்தின் "என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்தவர் அருண் விஜய். இவர் அடுத்து விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். விஜய்யின் 65-ஆவது படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இப்படத்தை நெல்சன் எழுதி இயக்குகிறார்.
----------------------------------------------------------------
"கே ஜி எப்' படத்தின் இரண்டாம் பாகத்தின் டீஸரில் நடிகர் யஷ் இயந்திர துப்பாக்கியின் குழலில் சிகரெட் பற்ற வைத்து புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் காட்சிக்கு கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
----------------------------------------------------------------
பவன் கல்யாண், ராம் சரண் இருவரும் அடுத்து தமிழில் நேரடியாகக் கால் பதிக்கவுள்ளனர். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இருவரும் ஒரே நேரத்தில் தமிழில் களம் இறங்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
----------------------------------------------------------------
"மாஸ்டர்' படத்திற்காக வில் வித்தை பயிற்சி எடுத்த விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா. அதோடு, வில் வித்தை மிகவும் கடினமான விளையாட்டு எனவும் பதிவிட்டுள்ளார்.
----------------------------------------------------------------
படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நாட்களில் தனது சினிமா நண்பர்களின் வீடுகளுக்குத் திடீரெனச் செல்வார் விஜய் சேதுபதி. அந்த வகையில் சமீபத்தில் குஷ்பூவின் வீட்டிற்குச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
----------------------------------------------------------------
"மாநாடு', "பத்து தல' ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் அடுத்தடுத்து பங்கேற்று வருகிறார் சிலம்பரசன். "மாநாடு' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் சுதா கொங்காரா இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.