முகப்பு
தினமணி கதிர்

திரைக்கதிர் 

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் 65 - ஆவது படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:


இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் 65 - ஆவது படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. பூஜா ஹெக்டே தமிழில் "முகமூடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குகிறார்.

இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே செம ஸ்டைலிஷ் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

-----------------------------------------------------------------------------------------------------------------------

Advertisement

"வணக்கம் சென்னை', "காளி' ஆகிய படங்களைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தை பெண்டலா சாகர் என்பவர் தயாரிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், "தர்பார்' படத்தைத் தொடர்ந்து, கதை உருவாக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், அடுத்தடுத்து 3 கதைகளுக்கான திரைக்கதைகளை முடித்திருக்கிறார்.

தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை. இதன்படி, கமலைச் சந்தித்து கதை கூறியுள்ளார். சமீபத்தில் "கேஜிஎஃப்' படத்தின் நாயகன் யாஷைச் சந்தித்தும் ஒரு கதையைக் கூறியுள்ளார். இப்படத்தை இந்திய அளவில் பிரமாண்டமாக உருவாக்கும் திட்டத்தில் இருவரும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். கமலின் பதிலுக்காகவும் காத்திருக்கிறார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

"அண்ணாத்த' மற்றும் "சாணி காயிதம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். மேலும் மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து அவர் நடித்துள்ள "மரைக்காயர்' படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கரோனா பொது முடக்கம் காரணமாக கீர்த்தி சுரேஷின் பல புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தான், உடலை வளைத்து யோகா செய்யும் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019 - ஆம் ஆண்டு வெளியான படம் "கைதி'.

பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதன் ரீமேக்கில் நடிகர் அஜய் தேவ்கான் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த ஹிந்தி ரீமேக் குறித்த தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. ஆம். தற்போது இந்த படத்தில் மனைவி கதாபாத்திரத்தை சேர்க்கவுள்ளதாகவும், மேலும் அந்த கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

-----------------------------------------------------------------------------------------------------------------------

ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டாம் குரூஸ். இவர் நடிப்பில் வெளியான "மிஷன் இம்பாசிபிள்' படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று.தற்போது "மிஷன் இம்பாசிபிள்' படத்தின் 7-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், "மிஷன் இம்பாசிபிள் 7' படக்குழுவில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாம். இதனால் உடனடியாக "மிஷன் இம்பாசிபிள் 7' படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

கன்னடத்தில் 2019- ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் "பீர்பால்'. இந்தப் படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். தமிழுக்கு ஏற்றபடி சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இந்த படத்தின் நாயகனாக, சாந்தனு நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சாந்தனு ஏற்கெனவே "முருங்கைக்காய் சிப்ஸ்', "ராவண கூட்டம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------


பாலிவுட்டில் நட்சத்திர காதலர்களாக வலம் வரும் ஜோடி டைகர் ஷெராப் - திஷா பதானி. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மும்பையில் தற்போது பொது முடக்க உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் திஷா பதானி தனது காதலருடன் இரவு நேரத்தில் காரில் சுற்றியுள்ளதாகத் தெரிகிறது.

அப்போது போலீசார் அவர்கள் சென்ற காரை வழிமறித்து விசாரித்தபோது சரியான காரணத்தைக் கூறவில்லை. இதனையடுத்து ஊரடங்கு விதிகளை மீறியதாக திஷா பதானி மற்றும் அவரது காதலர் டைகர் ஷெராப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

-----------------------------------------------------------------------------------------------------------------------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments