முகப்பு
தினமணி கதிர்

திரைக்கதிர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் "இந்தியன் 2'. மேக்அப் பிரச்னை, கமலுக்கு அறுவை சிகிச்சை, படப்பிடிப்பில் விபத்து, கரோனா அச்சுறுத்தல் எனத் தொடர்ச்சியாகப் பல்வேறு தடைகளால் இன்னும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் "இந்தியன் 2'. மேக்அப் பிரச்னை, கமலுக்கு அறுவை சிகிச்சை, படப்பிடிப்பில் விபத்து, கரோனா அச்சுறுத்தல் எனத் தொடர்ச்சியாகப் பல்வேறு தடைகளால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், தில் ராஜு தயாரிப்பில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷங்கர். இதன் நாயகியாக ஆலியா பட் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இதன் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

----------------------------------------------------------------------------------------------------------------

முன்னதாக, ராம்சரண் - கியாரா அத்வானி ஜோடி "விநய விதய ராமா' படத்தில் இணைந்து நடித்துள்ளது. அதற்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் இணைந்து நடிக்கவுள்ளது.

Advertisement

----------------------------------------------------------------------------------------------------------------

"எல்.கே.ஜி', "மூக்குத்தி அம்மன்' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ஆர்.ஜே. பாலாஜி. "மூக்குத்தி அம்மன்' படத்தின் திரைக்கதையை எழுதியதுடன், என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கினார். தற்போது தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஆர். ஜே. பாலாஜி நடிக்கவுள்ள படத்தை இயக்க இருப்பவர் இயக்குநர் ராம்.

----------------------------------------------------------------------------------------------------------------

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது "விடுதலை' என்ற படம் உருவாகி வருகிறது.

சூரி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன்பின் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகவுள்ள படம் "வாடிவாசல்'. இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், "வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறுகிய காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க இயக்குநர்
வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

----------------------------------------------------------------------------------------------------------------

"மெளனகுரு' படத்தின் மூலம் கவனிக்க வைத்த இயக்குநர் சாந்தகுமார். அதன்பின், 7 வருட இடைவெளியில் அவர் இயக்கிய படம் "மகாமுனி'. அதில், ஆர்யா மாறுபட்ட இரட்டை வேடங்களை ஏற்றிருந்தார். முதலுக்கு மோசம் செய்யாத "மகாமுனி', இதுவரை சர்வதேசப் படவிழாக்களில் வாங்கிக் குவித்த விருதுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார் சாந்தகுமார். புதிதாக சுட்டுரை கணக்கு தொடங்கியிருக்கும் அவர், ஆர்யா தயாரித்து, நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருப்பதும் உறுதியாகியிருக்கிறது.

----------------------------------------------------------------------------------------------------------------

மோகன்லால் "பரோஸ்' என்கிற படத்தை 3டி மேக்ஸ் தொழில்நுட்பத்தில் இயக்கி,நடிக்கத் தொடங்கிய நேரத்தில், கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்தது. தற்போது அந்தப் படத்துக்கான திரைக்கதையில் புதிய மாற்றங்களைத் தன்னுடைய கதாசிரியருடன் இணைந்து செய்து வருகிறாராம் மோகன்லால். சமீபத்தில் தன்னுடைய 61-ஆவது பிறந்தநாளை அமைதியாக, ஆனால் அர்த்தபூர்வமாகக் கொண்டாடியிருக்கிறார் அவர். கேரளாவில் உள்ள பதின்மூன்று அரசு மருத்துவமனைகளுக்கு ஒன்றரை கோடி மதிப்பிலான ஐ.சி.யூ படுக்கைகள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

----------------------------------------------------------------------------------------------------------------

மலையாளத்தில் அறிமுகமான சாய் பல்லவி பின் தமிழ் சினிமாவுக்கு வந்தார். இதன்பின் தமிழில் "தியா', "மாரி 2', "என்.ஜி.கே' போன்ற படங்களில் நடித்து வந்த இவர், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி மீண்டும் தனுஷுடன் இணைந்து நடிக்க போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகும் படத்தில், அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக உள்ள இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குநர் சேகர் கமுலா இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜி.அசோக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments