முகப்பு
தினமணி கதிர்

திரைக்கதிர்

சமீபத்தில் தெலுங்கில் ரவி தேஜா - ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான "கிராக்' படம் பெரும் வெற்றியடைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

கன்னடத்தில்முதன் முதலில் தனதுதிரைப் பயணத்தைத் தொடங்கியவர் ரஷ்மிகா மந்தனா. தெலுங்கில் வெளியான"கீதா கோவிந்தம்' படம் இவருக்கு மிகப் பெரிய வெளிச்சத்தைக் கொடுத்தது."சுல்தான்' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகிவிட்டார்.

இந்நிலையில் முதல் முறையாக திருமணம் குறித்து நடிகைரஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். ""தமிழ்நாட்டு கலாசாரம் மிகவும் பிடித்து போனதால் விரைவில் தமிழ்நாட்டு மருமகளாக வருவேன்'' எனகூறியுள்ளார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------

Advertisement

நிஜ வாழ்க்கையில் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் விவேக். மரம் நடுதலின் அவசியத்தை அனைவரிடமும் வலியுறுத்தி வந்தார்.

அவருக்கு அஞ்சலி செலுத்தியபோது, நடிகர் சிலம்பரசன், விவேக்கின் கனவை நனவாக்கும் விதமாக, ஆளுக்கொரு மரமாவது நடுவதுதான் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என கூறியிருந்தார். அப்படி கூறியதுடன் நில்லாமல் தற்போது அதைச் செய்தும் காட்டியுள்ளார் சிலம்பரசன். "மாநாடு' படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்று நட்டு தனது அஞ்சலியைச் செலுத்தியுள்ளார் சிலம்பரசன்.

----------------------------------------------------------------------------------------------------------------------------

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து உருவாகியுள்ள படம் "ஜகமே தந்திரம்'.

இப்படத்தின் டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி யில் வரும் ஜூன் 18 - ஆம் தேதி என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனுஷின் "ஜகமே தந்திரம்' படத்தை சுமார் ரூ. 50 கோடிக்கும் மேல் விலைகொடுத்து வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

----------------------------------------------------------------------------------------------------------------------------

தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார் சாய் பல்லவி.
மேலும் தற்போது தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வரும் நடிகை சாய் பல்லவி, "ஷயம் சிங்கராய்' எனும் படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவியை இதுவரை யாரும் பார்த்திராத அளவிற்கு லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த நடிகை சாய் பல்லவியின் ரசிகர்கள் இணையத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

----------------------------------------------------------------------------------------------------------------------------

கரோனாவால் பலமுறை தடைபட்ட "அண்ணாத்த' படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. ரஜினி படப்பிடிப்பில் தொடர்ச்சியாகப் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் ரஜினி "அண்ணாத்த' படத்தை தொடர்ந்து இன்னும் 2 படங்களில் நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒரு படத்தை மீண்டும் சிறுத்தை சிவாவே இயக்கவுள்ளார் என்றும் அவரின் நெருங்கிய வட்டாரங்களில் பேசப்படுகிறது.

விஜய்யின் ஹிட் படத்தைத் தயாரித்த நிறுவனம் தான் அப்படத்தையும் தயாரிக்கும் என்றும் தகவல் பரவி வருகிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------------

சமீபத்தில் தெலுங்கில் ரவி தேஜா - ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான "கிராக்' படம் பெரும் வெற்றியடைந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள "லாபம்' படத்திலும் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் மூத்த முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு நடிகை ஸ்ருதி ஹாசனை கதாநாயகியாக நடிக்கும்படி கேட்டு படக்குழு அணுகியுள்ளார்களாம். ஆனால் இதற்கு ஸ்ருதி ஹாசன் சம்மதம் தெரிவிக்கவில்லை.

  ----------------------------------------------------------------------------------------------------------------------------

வடிவேலு கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார். மேலும் தற்போது நலன்குமாரசாமி இயக்கத்தில் நடிகர் வடிவேலு ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டன.

இந்நிலையில் அப்படத்தின் தலைப்புடன், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு "காமெடி கவ்பாய்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------------------------------------------------------------------

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் 2017-ஆம் ஆண்டு வெளியான படம் "விக்ரம் வேதா'. ரசிகர்கள் மத்தியில் பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டனர். மாதவனாக சயீப் அலிகானும், விஜய் சேதுபதியாக அமீர் கானும் நடிப்பதாக இருந்தது.

பின்னர் அமீர் கான் இப்படத்திலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ஹிருத்திக் ரோஷன் இப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

ஆனால் தற்போது நடிகர் ஹிருத்திக் ரோஷன், இப்படத்திலிருந்து விலகியுள்ளதாக தெரிகிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------------

"துப்பறிவாளன்' இரண்டாம் பாகத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்தது. இதனிடையே விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக மிஷ்கின் இப்படத்தில் இருந்து விலகினார்.

இதனால் மீதிப் படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து இப்படம் குறித்து எந்தவித தகவலும் இல்லை. நடிகர் விஷாலோ, அடுத்தடுத்து மற்ற படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது "எனிமி' படத்தில் நடித்து வரும் விஷால், அடுத்ததாக சரவணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இதுதவிர கார்த்திக் தங்கவேலு இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments