முகப்பு
தினமணி கதிர்

திரைக்கதிர்

இந்தியா முழுக்க ரசிகர்களைப் பெற்றவர் காஜல் அகர்வால்.  அடுத்தடுத்த வாய்ப்புகள் அமைந்து வந்த நேரத்தில் கெளதம் கிச்சலு என்பவரைக் கடந்த அக்டோபர் மாதம் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்துகொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

இந்தியா முழுக்க ரசிகர்களைப் பெற்றவர் காஜல் அகர்வால்.  அடுத்தடுத்த வாய்ப்புகள் அமைந்து வந்த நேரத்தில் கெளதம் கிச்சலு என்பவரைக் கடந்த அக்டோபர் மாதம் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்துகொண்டார்.

உடனே திருமணத்திற்குப் பிறகு காஜல் நடிப்பை தொடர்வாரா என்கிற கேள்வி எழுப்பபட்டது. இதற்கு அண்மையில் நடிகை காஜல் அகர்வால் பதில் அளித்துள்ளார். அதாவது அவரது கணவர் கெளதம், காஜலின் சினிமா பயணத்திற்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறாராம். ஒருவேளை எதிர்காலத்தில் தனது கணவர் நடிப்பை நிறுத்திவிடும்படி கூறினால் உடனே நிறுத்திவிடப் போவதாக அந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

--------------------------------------------------------------------------------------------------------

Advertisement

"அண்ணாத்த', "சாணி காயிதம்", "மரைக்காயர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். கரோனா பொது முடக்கத்தால் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் கீர்த்தி, அவ்வப்போது    யோகாசனம் செய்யும் விடியோக்களை வெளியிட்டு வருகிறார்.  

அது குறித்த  புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் வெளியிடுகிறார். அந்த வகையில் தற்போது யோகா செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு, உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக தெரிகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். ""அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி விட்டீர்கள்...'' என்று ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

--------------------------------------------------------------------------------------------------------

இந்திய அளவில் புகழ் பெற்ற பாடகியாக திகழ்ந்து வருகிறார் ஸ்ரேயா கோஷல். இவர் கடந்த 2015- ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின்னரும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடி கொண்டிருக்கிறார் ஸ்ரேயா.

சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாகக் குறிப்பிட்டு அழகிய புகைப்படம் ஒன்றையும் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டார்.இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஸ்ரேயா கோஷலுக்கு  ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை தனது சமூக வலைதள பக்கத்தில் சந்தோஷத்துடன் பகிர்ந்துள்ளார் ஸ்ரேயா. 

--------------------------------------------------------------------------------------------------------

பரமபதம்'  படம் வெளியான நிலையில், தற்போது "கர்ஜனை', "சதுரங்க வேட்டை-2', "ராங்கி', "சுகர்', "1818' ஆகிய படங்கள் த்ரிஷாவின் கை வசம் உள்ளன. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் " பொன்னியின் செல்வன்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் பொது முடக்கம் சமயத்தில் படப்பிடிப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இருக்கும் த்ரிஷாவிடம் சில இயக்குநர்கள் கதை சொல்ல முனைப்புக் காட்டி வருகிறார்கள். ஆனால் த்ரிஷா யாரிடமும் கதை கேட்கவில்லை என கூறப்படுகிறது. கரோனா பரவல் முடிவுக்கு வந்த பின்னர் தான் புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளார் த்ரிஷா.

--------------------------------------------------------------------------------------------------------

ரோனா தாக்கம் ஜூன் மாதத்தில் உச்சம் தொடும் என்கிறார்கள்.  கரோனா தடுப்பு பணிக்காக பெரும் நிவாரணத் தொகை தேவைப்படுவதால், பொது மக்களின் உதவியை நாடியுள்ளது மாநில அரசு.  திரை நட்சத்திரங்கள் பலரும் நிவாரண நிதி அளித்து வருகிறார்கள். தமிழக அரசு கேட்டுக் கொண்டபடி பிரபலங்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் கரோனாவிற்காக நிதி கொடுத்து வருகிறார்கள். அதன்படி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் ரூ. 1 லட்சம் தமிழக அரசுக்கு நிதி கொடுத்துள்ளார். பெப்சி அமைப்புக்கும் ரூ. 1 லட்சம் தந்துள்ளார்.

--------------------------------------------------------------------------------------------------------

டந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தின் போது ஓடிடி தளத்தில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்ற படம்,  "சூரரைப் போற்று'. விமர்சனரீதியாகவும் படத்துக்கு பலத்த வரவேற்பு எழுந்தது. அதனைத் தொடர்ந்து  ஞானவேல் இயக்கத்தில்  நடித்து வருகிறார் சூர்யா.  

இது இவருக்கு 39-ஆவது படம். இதனிடையே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்  "நவரச' என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார் சூர்யா. தற்போது அதன் படப்பிடிப்புத்தளத்தில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. 

--------------------------------------------------------------------------------------------------------

ரோனாவின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் பெரும் அச்சத் ஏற்படுத்தியுள்ளது. இயல்பு வாழ்க்கையில் இருந்து மக்களை அப்புறப்படுத்தியுள்ளது.  தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் திடீர் மரணத்தைத் தழுவி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர்கள் பலர் கரோனா குறித்து விழிப்புணர்வு விடியோக்களைப் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் கரோனா அச்சம் குறித்து விழிப்புணர்வு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments