பிரபல ஹீரோயின்கள் ஒரு பாட்டுக்கு ஆடுவது புதிய வழக்கமாகி வருகிறது. "புஷ்பா' படத்தில் சமந்தா ஆடிய பிறகு அது இன்னும் அதிகரித்துள்ளது. ரெஜினா கெசண்ட்ரா சிரஞ்சீவியின் "ஆச்சார்யா' படத்தில் ஆடியிருக்கிறார். ஸ்ருதி ஹாசன் ஏற்கெனவே "ரங்கஸ்தலம்' படத்தில் ஆடியுள்ளார். இந்த நிலையில் தற்போது தமன்னா, கிரண் கொரபாட்டி இயக்கத்தில் வருண் தேஜ் நடிக்கும் "ஹானி' என்ற படத்தில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இப்பாடலுக்கான வரிகளை ராம்ஜோகய்யா சாஸ்திரி எழுதியுள்ளார், எஸ். தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சாய் மஞ்ச்ரேக்கர், ஜெகபதி பாபு, உபேந்திரா, சுனில் ஷெட்டி மற்றும் நவீன் சந்திரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
-------------------------------------
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட 9 மொழிகளில் 600 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரண்ராஜ். நாயகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதாபத்திரத்திலும் தனி முத்திரைப் பதித்து, தனக்கென தனித்த இடம் பிடித்தவர். ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இன்னும் பெயரிடப்படாத இப்படம் மூலம் இயக்குநராக கால்பதிக்கிறார் சரண்ராஜ்.
கதை, திரைக்கதை, வசனத்தையும் அவரே எழுதுகிறார். இதில் கதாநாயகனாக அவரது மகன் நடிக்கிறார். பைலட்டாக இருந்து, கொவைட் காலத்தில் பணியினை விட்டு, நடிப்பு கல்லூரியில் சிறப்பு பயிற்சி எடுத்து கொண்டு, இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் தேவ் சரண்ராஜ். ஒரு குப்பத்தில், மீனவ இளைஞனுக்கும் மார்வாடி பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதை தான் இந்தப்படம். இப்படத்தில் இரண்டு காதல் ஜோடிகள் நடிக்கவுள்ளனர். தேவ் சரண்ராஜ், சுஷ்மிதா சுரேஷ் முதன்மை ஜோடியாக நடிக்க, ஆதி தேவ் மற்றும் பிரியதர்ஷினி அருணாசலம் இன்னொரு ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை ஜனார்தன் செய்கிறார். படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
-------------------------------------
இயக்குநர் வம்சி இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படமான "டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. "தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான இந்த திரைப்படத்தின் தொடக்க விழா மாதப்பூரிலுள்ள நோவாடெல் என்னுமிடத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட விழா மேடையில் நடைபெற்றது.
தெலுங்கு திரை உலகம் இதற்கு முன் கண்டிராத வகையில் பிரம்மாண்டமான பிரீ லுக் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, "தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
படத்தின் முதல் பிரத்யேக படப்பிடிப்பை சிரஞ்சீவி கிளாப் போர்டு அடிக்க, இந்த திரைப்படத்தை வெளியிடும் தேஜ் நாராயணன் அகர்வால் கேமராவை இயக்க, நாயகன் ரவி தேஜா, நாயகிகள் நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் நடித்தனர். இந்த காட்சிக்கு "தி காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கெvரவ இயக்குநராக பணியாற்றினார்.
-------------------------------------
சீனு ராமசாமி இயக்கி உள்ள படம் "மாமனிதன்'. விஜய்சேதுபதி, காயத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இசையமைத்து தயாரித்துள்ளார்.
இந்த படம் தயாராகி சில ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் வெளிவரவில்லை. தற்போது வெளிவருகிறது. ஆனால் இந்தப் படத்தை ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதமே பார்த்து பாராட்டி உள்ளார்.
அந்த தகவலை சீனு ராமசாமி இப்போது வெளியிட்டிருக்கிறார். "மாமனிதன்' படம் பார்த்து பாராட்டி, நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள்(ரஜினி) பேசியதை வெளியே சொல்லவில்லை. அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள். நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள் அதுபோதும் என்றேன். இன்று படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, விற்பனையும் ஆகிவிட்டது. நன்றி சார்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நடிகை மஞ்சிமா மோகனும், தமிழ் நடிகர் கௌதம் கார்த்திக்கும் "தேவராட்டம்' என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது முதல் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள வெளியானது. இதனை அவர்கள் இருவரும் மறுக்காமல் இருந்தார்கள். சமீபத்தில் மஞ்சிமா மோகனுக்கு கவுதம் கார்த்திக் காதல் வழிய வழிய வாழ்த்தும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் யாரையும் காதலிக்கவில்லை என்று மஞ்சிமா மோகன் கூறியிருக்கிறார். மலையாள சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவரிடம் இது குறித்து கேட்டபோது:
""என் வாழ்க்கையில் நடக்கும் முக்கிய சம்பவங்களை யாரிடமும் நான் மறைத்ததில்லை. ஒவ்வொரு மகிழ்ச்சியையும் நான் மக்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறேன். அது சின்னதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் நான் தவறாமல் கூறி வருகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.