என்ன ஆனது பிரபஞ்ச அழகிக்கு?
உருவக் கேலிக்கு "பிரபஞ்ச அழகி' ஹர்னாஸ் கவுர் சந்துவும் ஆளாகி இருக்கிறார். அதுவும் இந்தியாவில்.
தினமணி கதிர்என்ன ஆனது பிரபஞ்ச அழகிக்கு?
உருவக் கேலிக்கு "பிரபஞ்ச அழகி' ஹர்னாஸ் கவுர் சந்துவும் ஆளாகி இருக்கிறார். அதுவும் இந்தியாவில்.
உருவக் கேலிக்கு "பிரபஞ்ச அழகி' ஹர்னாஸ் கவுர் சந்துவும் ஆளாகி இருக்கிறார். அதுவும் இந்தியாவில்.
சென்ற ஆண்டு "பிரபஞ்ச அழகி'யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹர்னாஸ் கவுர் சந்து ஜனவரியில் அமெரிக்காவில் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட ஆடம்பர பங்களாவில் குடியேறினார். ஒரே ஒரு நிபந்தனை. அந்த ஆண்டு அமெரிக்க அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவருடன் சேர்ந்து வசிக்க வேண்டும்.
அமெரிக்காவில் தங்கும்போது உணவு, உடை, அலங்காரம், அலங்கார பொருள்கள், காலணிகள் கழுத்து அணிகள் இலவசமாகக் கிடைக்கும். உடல் பயிற்சி போன்ற அனைத்திற்கும் எல்லா வசதிகளும், உதவியாளர்களும் உண்டு.
எல்லா செலவுகளையும் பிரபஞ்ச அழகியைத் தேர்ந்தெடுக்கும் அமைப்பு ஏற்றுக் கொள்ளும். பரிசுத் தொகை கோடிக் கணக்கில் வரும். அது கணக்கில் சேர்த்தியில்லை. பரிசுத் தொகை முழுக்க முழுக்க ஹர்னாஸூக்குச் சொந்தம். அமெரிக்காவில் எந்த முக்கிய நிகழ்ச்சி நடந்தாலும் "வி ஐ பி' அந்தஸ்தில் பிரபஞ்ச அழகி கலந்து கொள்ளலாம்.
உலக நாடுகளுக்கு இலவசமாக பயணிக்கலாம். பயணத்தின்போதும் உணவு, உடை, தங்கும் அறை என்று அனைத்து செலவுகளையும் பிரபஞ்ச அழகியைத் தேர்ந்தெடுக்கும் அமைப்பே ஏற்றுக் கொள்ளும். மொத்தத்தில் ஓராண்டிற்கு மகாராணி போல வாழலாம்.
உலக நாடுகளின் பயணத்தில் ஒரு பகுதியாக சமீபத்தில் ஹர்னாஸ் இந்தியாவில் மும்பை நகருக்கு வந்திருந்தார்.
"லக்மே ஃபேஷன்' ஷோவில் கலந்து கொண்டார். அங்கேதான் வினை வந்து சேர்ந்தது.
ஹர்னாஸ் "கேட் வாக்' நடந்து மேடைக்கு வந்தபோது அரங்கில் இருந்தவர்களும், அந்த ஷோவை சானல்களில் பார்த்தவர்களும் ஹர்னாஸின் புறத் தோற்றத்தை பார்த்து "இவர் பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் தானா " என்று அதிர்ந்து போயினர். காரணம், ஹர்னாஸின் புறத்தோற்றம் மாறியிருந்ததுதான்.
"ஹர்னாஸ் தடித்து விட்டார்... வெயிட் போட்டிருக்கிறார்' என்று கமெண்டுகள் அரங்கில் எழுந்தன. ஊடகங்களிலும் வலைதளங்களிலும் வலம் வரத் தொடங்கிவிட்டன.
அடுத்த பிரபஞ்ச அழகி தேர்ந்தெடுக்கப்படும் வரையில், இப்போது பிரபஞ்ச அழகியாக இருப்பவர் ஓராண்டு காலம் எல்லாவிதத்திலும் அளவாக பிரபஞ்ச அழகியாகக் கச்சிதமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் மேக்கப் சாதனங்கள், சர்வதேச தரத்தில் ஒப்பனை செய்யும் கலைஞர்கள், தங்கள் சேவைகளை அழகிக்கு இலவசமாக வழங்குகிறார்கள்.
லேட்டஸ்ட் ஃபேஷன் உடைகளை வழங்குகிறார்கள். முறையான உடல் பயிற்சிகளை பிரபஞ்ச அழகி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தனை வாய்ப்பு, வசதிகள், மேற்பார்வை, கண்காணிப்பு, கட்டாய உடல் பயிற்சி இருந்தபோதும் ஹர்னாஸ் எப்படி புஷ்டியாகிப் போனார். குறிப்பாக முகத்தில் எப்படி சதை விழுந்தது என்று ஃபேஷன் விழாவில் அழகிகளை கையாளுபவர்கள் அங்கலாயிக்கிறார்கள். அரங்கில் இருந்தவர்களும் "இப்படி மாறிவிட்டாரே... ஹர்னாஸ்' என்று பெருமூச்சு விடுகிறார்கள்.
ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதாசென், லாரா தாத்தா, மானுஷி சில்லர், பிரியங்கா சோப்ரா, யுக்தா முக்கி, டயானா ஹைடன், ரீடா ஃபரியா போன்ற உலக அழகிகள் விஷயத்தில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓராண்டில் இப்படி ஒரு பிரச்னை எழவில்லை.
இது உருவக் கேலி இல்லை. எப்படி அழகாக இருந்த ஹர்னாஸ் சில மாதங்களுக்குள் இப்படி மாறிபோய் விட்டாரே. "உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும்.. என்ற செய்தியை பெண்களிடையே பரப்ப வேண்டும் என்பதுதானே அழகிப் போட்டியின் முக்கிய லட்சியம்' என்ற ஆற்றாமையே விமர்சனங்களாக வெளிப்பட்டுள்ளது என்கிறார்கள் ஃபேஷன் உலகின் ஜாம்பவான்கள்.
" உலக அழகி' என்றால் எல்லாவிதத்திலும் ஓராண்டிற்காகவாவது அழகியாக இருக்க வேண்டும். அழகைப் பேண வேண்டும். இந்தியாவில் ஹர்னாஸ் குறித்த ஆற்றாமை வெளிப்படும்போது, இதர நாடுகளில் ஹர்னாûஸ நோக்கி என்னென்ன கமெண்டுகள் வந்து சேர போகிறதோ என்று கவலைப்படுகிறார்கள்.
ஊடகங்களில் ஹர்னாஸின் திடீர் உருவ மாற்றம் சர்ச்சை விஷயமாகவே, "இனியும் விளக்கம் தராமல் இருந்தால் சர்ச்சை சர்வதேச அளவில் சூடு பிடிக்கும்' எனக் கருதி ஹர்னாஸ் மனம் திறந்திருக்கிறார்:
""ஆரம்பத்தில் உடல் அளவில் அதிகமாக மெலிந்திருக்கிறேன் என்று கேலி செய்தார்கள். இப்போது பருமனாகிவிட்டேன் என்று கிண்டல் செய்கிறார்கள். ஆனால் யாருக்கும் எனக்கு "செலியாக்' நோய் இருப்பது தெரியாது. இந்த நோய் காரணமாக நான் கோதுமை மாவில் தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்களை சாப்பிடமுடியாது. குளுட்டன் எனப்படும் ஒட்டிக் கொள்ளும் பசையைக் கொண்டிருக்கும் "பச்சையம்' உள்ள எந்த உணவுப் பண்டத்தையும் நான் சாப்பிடக் கூடாது.
"செலியாக்' நோய் வந்தால் உடல் பருமனாகும். ஒல்லியோ.. பருமனோ.. இது எனது உடல், உருவம் அதை நான் பெரிதும் நேசிக்கிறேன்'' என்று கொஞ்சம் அழுத்தமாகவே ஹர்னாஸ் சொல்லியிருக்கிறார்.
செலியாக் நோய் வந்தால் உடலில் சத்து குறையும். எலும்பின் அடர்த்தி குறையும். தாய்மை அடைவதில் பிரச்னை ஏற்படும். மூளை சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். உடல் பருமன் கூடும் அல்லது உடல் மெலியும்.
உடல் பருமனானால் என்ன... முகம் கொஞ்சம் சதை பற்றாய் தெரிந்தால் என்ன... ஹர்னாஸ் உபாதை இல்லாமல் இருந்தால் போதும்'' என்கிறார்கள் ஹர்னாஸின் பெற்றோர்.
பிரபஞ்ச அழகுப் போட்டிகளை நடத்தும் உயர்மட்டக் குழு ஹர்னாஸ் உருவ மாற்றம் குறித்து என்ன சொல்லப்போகிறது என்று உலக அழகிகள், ஹர்னாஸ் உட்பட, எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
- சக்கரவர்த்தி