குதிரைப் பந்தயம்!
குதிரையை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள்.
குதிரையை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள்.
குதிரையை சரியான முறையில் பழக்கி தங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்பட வைத்தவர் சிவப்பிந்தியர்கள்.
குதிரையைப் போர்களுக்குப் பயன்படுத்திய பெருமை இந்திய அரசர்களைச் சாரும். பின்னர், உலக நாடுகள் குதிரையை விளையாட்டுகளுக்கு பயன்படுத்தத் தொடங்கின. இதன் விளைவாகத் தோன்றியதுதான் குதிரைப் பந்தயங்கள்.
Advertisement
எகிப்து, பாபிலோனியா, சிரியா போன்ற நாடுகளில் குதிரைப் பந்தயம் பிரசித்திப்பெற்றது.
முதன்முதலாக குதிரைப் பந்தயம் இங்கிலாந்து நாட்டில் 12-ஆம் நூற்றாண்டில் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அரேபியா, துருக்கி, பெர்சியா ஆகிய நாட்டு வணிகர்கள் குதிரைகளை இறக்குமதி செய்து பந்தயத்திற்குப் பயன்படுத்தினர். அரேபியா நாட்டுக் குதிரைக்கு மவுசு அதிகம்.
குதிரைப் பந்தயத்திற்காக சட்டங்கள் 1751-ஆம் ஆண்டு இயற்றப்பட்டன. 1798 - ஆம் ஆண்டு குதிரைப் பந்தயம் குறித்த முதல் செய்தித்தாள் வெளியானது.18-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் குதிரைப் பந்தயம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்தது.