முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி... 

தினமணி கதிர்

சிரி... சிரி... 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

"இட்லி என்னப்பா கல்லு மாதிரி இருக்கு?'
 "கல் தோசை மாதிரி இது, கல் இட்லி சார்...!  பிரேக்ஃபாஸ்ட்டா 4- இட்லி சாப்பிட்டா போதும். மதிய சாப்பாடு தேவையே இருக்காது சார்!'

-------------------

 "குப்புற விழுந்தும் மீசையில மண் ஒட்டலைனு சொல்றாரே..?'
 "அவர் விழுந்தது,  சிமெண்ட் தரையாச்சே!'

---------------------


"இது முனிவரோட குழந்தையின்னு எப்படி உறுதியா சொல்றே?''
"தவமிருந்து பெத்தபிள்ளை ''ன்னு சொன்னாரே..! 

-----------------------


"ஆபீஸ்ல இவர் பேரில் என்ன புகார்?'
"தானும் தூங்க மாட்டார்... மற்றவர்களையும் தூங்க விட மாட்டார் .''

-----------------------

"எப்படி செய்தால் சரியா வரும்?'
" இப்படி செய்.'
" சரியாக வரலன்னா?'
" அப்படி செய்.'
"அப்பவும் சரியா வரலன்னா?'  
" எப்படியோ செய்.'

----------------------------

"இவரைத் தூக்கத்தில் இருந்து எழுப்பிடாதே..''
"ஏன் ?  அலறுவாரா?'
"சாப்பிட ஏதாவது கேட்பார்.'
 
 

முழு கட்டுரையைப் படிக்க →