சிரி...சிரி...
'' டாக்டர் சைகையிலேயே ட்ரீட்மெண்ட் செய்தாரா?'''' ஊமை காயமாம்''
தினமணி கதிர்சிரி...சிரி...
'' டாக்டர் சைகையிலேயே ட்ரீட்மெண்ட் செய்தாரா?'''' ஊமை காயமாம்''
'' டாக்டர் சைகையிலேயே ட்ரீட்மெண்ட் செய்தாரா?''
'' ஊமை காயமாம்''
- மஞ்சுதேவன்,
பெங்களூரு.
''புதுசா திருமணமான அந்த ஜோடிக்கு ஏன் ஒரே மூச்சு வாங்குது?''
''அவங்கதான் ஓடிப் போய் கல்யாணம் செய்துகிட்டாங்க! அதான்''
-தீபிகா சாரதி,
சென்னை.
''டாக்டர். நீங்க என்னிடம் வாங்கிய கடனை சீக்கிரமா தாங்க!''
''ஏன்னாச்சு? இப்படி கேட்க மாட்டீங்க?''
''நீங்க மனோதத்துவ டாக்டராச்சா! உங்களைப் பார்த்துட்டு போனா எல்லோரும் ஒரு மாதிரியா பார்க்குறாங்க!''
-கு..அருணாசலம்,
ன்காசி.
''எதிர்வீட்டுக்காரர் அவரு மனைவிக்கு வைரதோடு வாங்கித் தந்தாராம். நீங்க வாங்கித் தருவீங்களா..?''
''வேண்டாம். டியர். வீணா அவங்க வீட்டுல குழப்பம் வந்துடும்.''
-பி.பாலாஜி கணேஷ்,
சிதம்பரம்.
''உன் காதலன் என்னடி சொல்லுறான்?''
''அவன் கிடக்கிறான் விடுடி. எப்பப் பாரு கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டு நச்சரிக்கிறான்டி!''
-எம்.அசோக்ராஜா,
அரவக்கறிச்சிப்பட்டி.
''மாமியார் வீட்டுலேயே ரொம்ப நாளாக இருக்கிறது வெறுத்துப் போச்சு சார்''
''அதுக்கு''
''ஒரு சேஞ்சுக்கு 10 நாள் தங்கிட்டு வரலாமுன்னு மச்சினன் வீட்டுக்கு போகப் போறேன்''
-கி.வாசுதேவன்,
தஞ்சை.