""உங்க வீட்டுல யாருக்காவது சுகர் இருக்கா?''
""டாக்டர். நான் வீட்டுல இல்லை; மேன்சனில்தான் இருக்கேன்''
""டாக்டர்! சாப்பிடவே பிடிக்க மாட்டேங்குது?''
""மாத்திரை தர்றேன். சாப்பிடுங்க!''
""மாத்திரை சாப்பாட்டுக்கு அப்புறம் சாப்பிடணுமா? முன்னாடி சாப்பிடணுமா?''
""தூக்கத்துல நடக்கற வியாதிக்கு உங்க கணவருக்கு மருந்து கொடுத்தேனே. என்னாச்சு''
""இப்ப அவரு எழுந்து ஓடுறாரு டாக்டர்..!''
""உங்களுக்கு பி.பி. விலைவாசி மாதிரி இருக்கு''
""என்ன டாக்டர் சொல்றீங்க..!''
"" ஆமாம். ஏறிகிட்டே இருக்கே..!''
""ஆடு, கோழியெல்லாம் சாப்பிட்டா நீங்க குண்டாகிடுவீங்க..?''
""டாக்டர். அதுங்க சாப்பிட்டா நான் எப்படி குண்டாவேன்''
""ஆஸ்பத்திரியில உங்களுக்கு ஏதாவது கஷ்டம் இருக்கா..?''
""உங்க நர்ஸை சிஸ்டர்னு கூப்பிடறதுதான் கஷ்டமா இருக்கு.. டாக்டர்..''
""டாக்டர். ஆபரேஷனை தவிர வேறு வழி ஏதாவது இருக்கா?''
""இருக்கே. நீங்க நன்கொடையா ஏதாவது கொடுக்கலாம்!''
""டாக்டர் சாப்பாடே பிடிக்க மாட்டேங்குது''
""நான் நாலு, அஞ்சு ஓட்டல் பேரு எழுதி தர்றேன். அங்க போய் சாப்பிடுங்க..!''
- தீபிகா சாரதி,
சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.