பேல்பூரி
""மீனா! உன் தங்கை சுபா வீட்டுக்கு புறப்படுறோம். சீக்கிரம் கிளம்பு'' மாதத்திற்கு இரண்டு நாட்கள் எப்படியாவது தன் மனைவியின் தங்கை வீட்டில் போய் ஜாலியாக இருந்து வரும் பழக்கம் பாண்டியனுக்கு இருந்தது.
தினமணி கதிர்பேல்பூரி
""மீனா! உன் தங்கை சுபா வீட்டுக்கு புறப்படுறோம். சீக்கிரம் கிளம்பு'' மாதத்திற்கு இரண்டு நாட்கள் எப்படியாவது தன் மனைவியின் தங்கை வீட்டில் போய் ஜாலியாக இருந்து வரும் பழக்கம் பாண்டியனுக்கு இருந்தது.
கண்டது
( நாகப்பட்டினம் காய்கறி மார்க்கெட் வேன் ஒன்றின் முன்புறக் கண்ணாடியில்)
வில் அம்புகளைவிடசொல் அம்புகள் கூர்மையானவை...
இதயத்தைக் காயப்படுத்துவதில்.
-வ.அமுதன்,
அகஸ்தியன்பள்ளி.
(சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)
வெள்ளிக்கட்டி
கா.முத்துச்சாமி,
திருவாடானை.
(நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் தெரு ஒன்றின் பெயர்)
தொந்தி விளாகம் தெரு.
ஆ.மாடக்கண்ணு,
பாப்பான்குளம்.
கேட்டது
(சிதம்பரத்தில் உள்ளாட்சித் தேர்தலில்போட்டியிடும் ஒரு வேட்பாளரிடம் ஒரு பெண்)
""என்னக்கா ரொம்ப நாழியா என்னையே பார்க்குறீங்க?''
""தேர்தல் சமயத்துல உங்க முகத்தை பார்த்தா தான் உண்டு. ஜெயித்த பிறகு இந்த பக்கம் வரவா போறீங்க தம்பி?''
பா.கவிதா,
கோவிலாம்பூண்டி.
(தஞ்சை தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில்)
""665ரூபாய் சில்லறையா கொடுங்க''
"" இந்தாங்க எழுநூறு ரூபாய் இருக்கு''
""என்கிட்ட சில்லறை இல்ல, நீங்க சில்லறையாகத்தான் கொடுக்கணும்''
""நான் வீட்டைவிட்டு வெளியே வரும்போதே குறுக்கே வந்த பல்லி சொன்னது, "டாக்டர் உனக்கு அறுநூத்து அறுபத்தைந்துக்குத்தான் மருந்து எழுதி கொடுப்பார்'னு. நான்தான்சில்லற கொண்டுவராமல்தப்பு பண்ணிட்டேன்."
ஜி.அழகிரிவேல்,
ஒதியடிக்காடு.
யோசிக்கிறாங்கப்பா!
காற்றுக்கு சுதந்திரம் கிடைத்தால், சூறாவளி.
நீருக்கு சுதந்திரம் கிடைத்தால், வெள்ளம்.
மழைக்கு சுதந்திரம் கிடைத்தால், புயல்.
மனிதனுக்கு சுதந்திரம் கிடைத்தால், மிருகம்.
சுந்தரி காந்தி,
சென்னை-56
மைக்ரோ கதை
""மீனா! உன் தங்கை சுபா வீட்டுக்கு புறப்படுறோம். சீக்கிரம் கிளம்பு'' மாதத்திற்கு இரண்டு நாட்கள் எப்படியாவது தன் மனைவியின் தங்கை வீட்டில் போய் ஜாலியாக இருந்து வரும் பழக்கம் பாண்டியனுக்கு இருந்தது.
சுபா வீட்டுக்கு வந்து ஆயிற்று. வழக்கம் போல தன் கணவனைக் கண்காணித்தாள் மீனா. இங்கு வரும் போதெல்லாம் எப்போதும் தன் கணவன் வாயில், "சுபா... சுபா... சுபா' என்ற அவள் தங்கை பெயர் தான் வந்து கொண்டே இருக்கும். ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதில் இருந்து, சாப்பாடு சாப்பிடுவது வரை சுபாவையே கூப்பிட்டுக் கொண்டிருந்தான்பாண்டியன்.
கணவனின் இந்த போக்கு மீனாவுக்கு சலனத்தை ஏற்படுத்தியது. "உம்' என்று இருந்தாள். இரண்டு நாட்கள் கழித்து, வீடு திரும்பினார்கள். தன் மனதில் உறுத்திக் கொண்டிருந்த அந்த விஷயத்தை பட்டென்று போட்டு உடைத்தாள் மீனா.
""என்னங்க... மாதம் இரண்டு நாட்கள் என் தங்கை வீட்டுக்கு நீங்கள் போவது, அவளிடம் பல்லிளித்து காட்டி பழகிக் கொள்ளத் தானோ? அங்கே போனதும் சுத்தமாக என்னை மறந்து விடுகிறீர்களே?'' என்றாள் கோபமாக. ""மீனா! தவறாக எதையும் நினைத்து விடாதே... இங்கு மாதம் முழுவதும் வீட்டில் நீ "மாங்கு மாங்கு' என்று வேலை செய்கிறாய். மாதம் இரண்டு நாளாவது உனக்கு முழு ஓய்வு கிடைக்க வேண்டும் என்று தான் உன் தங்கை வீட்டிற்கு அழைத்துச் சென்று உனக்கு எந்த தொந்தரவும் செய்வது இல்லை'' என்றான்.
"இவரைப் போய் தப்பாக நினைத்துவிட்டோமே' என்று சங்கடப்பட்டாள் மீனா.
கு.அருணாசலம்,
தென்காசி.
எஸ்எம்எஸ்
யார் நினைத்தாலும் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கலாம்.
நாம் நினைத்தால் மட்டும் அதைப் பின்பற்ற முடியும்.
தி. பச்சமுத்து,
கிருஷ்ணகிரி-1.
அப்படீங்களா!
பற்களைத் தூய்மையாக்க அதிக நேரம் எல்லாம் இப்போது தேவையில்லை. 10 விநாடிகளில் பல் துலக்குவதற்கு உதவும் டூத் பிரஷ் வந்து விட்டது. "வொய் பிரஷ்' என்ற பெயருள்ள இந்த டூத் பிரஷை பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் உள்ள வொய் பிரஷ் நிறுவனம் தயாரித்துவருகிறது.
2017 - ஆம் ஆண்டே இம்மாதிரியான டூத் பிரஷ் வெளியிடப்பட்டாலும், முற்றிலும் சீரமைக்கப்பட்ட பிரஷ் இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது.
பிரஷ்ஷின் கைப்பிடியையும், பல்துலக்கும் பிரஷ் உள்ள பகுதியையும் நாம் தனியே பிரித்துக் கொள்ளலாம்.
பல்துலக்கும் பகுதி நைலான் இழைகளினால் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை பல்லில் பொருத்திக் கொண்டு, கைப்பிடியில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும், பல் துலக்கப் பயன்படும் நைலான் இழைப் பகுதியில்அதிர்வுகள் ஏற்பட்டு பத்து விநாடிகளில் பல் தூய்மையாகிவிடும்.
பேட்டரியால் இயங்கக் கூடிய இந்த பல்துலக்கும் கருவியை வாயின் இடதுபுறம், வலதுபுறம் லேசாக அசைத்தால் போதும். மேலும் கீழும் அசைக்கவோ, சுழற்றவோ தேவையில்லை.
பல்துலக்கும்போது ஏற்படும் அதிர்வை ஷாப்ட், நார்மல், இன்டென்ஸ் என்ற மூன்றுவிதங்களில் இயக்கலாம்.
பிரஷ் எஸ், பிரஷ் எம் ஆகிய இரு அளவுகளில் உள்ள இந்த பிரஷ்களில், பிரஷ் எம் 12 வயதுக்கு மேற்பட்டோரும், பிரஷ் எஸ் 4 வயதிலிருந்து 12 வயதுக்குள் இருப்பவர்களும் பயன்படுத்தும்விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
என்.ஜே.,
சென்னை-58