முகப்பு
தினமணி கதிர்

பேல்பூரி

அமாவாசை இரவு.  கும்மிருட்டு. அச்சத்துக்கு இடையே மயானத்துக்கு நடுவே உள்ள ஒத்தையடிப் பாதையில், தனது கிராமத்துக்கு ஒருவர் சென்றுகொண்டிருந்தார்.

தினமணி கதிர்

பேல்பூரி

அமாவாசை இரவு.  கும்மிருட்டு. அச்சத்துக்கு இடையே மயானத்துக்கு நடுவே உள்ள ஒத்தையடிப் பாதையில், தனது கிராமத்துக்கு ஒருவர் சென்றுகொண்டிருந்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
பகிர்:


கண்டது


(குமரி மாவட்டத்தில் ஓர் ஊரின் பெயர்)

சக்கப்பத்து

-கே.எல்.புனிதவதி, 
கோவை.

(மதுரை மாவட்டத்தில் ஓர் கிராமத்தின் பெயர்)

புண்ணாக்குப்பட்டி

-நாராயணன், 
மயிலாடுதுறை.

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை கிராமத்தில் ஒரு வீட்டின் பெயர்

நல்லா இருக்கோம் இல்லம்

-சங்கீதா சரவணன், 
மயிலாடுதுறை.


கேட்டது
 

(சிதம்பரம் வேங்கான் தெருவில் தம்பதி பேசியது)

"" யார்கூட இவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருந்தீங்க.'
""தங்கச்சி கூட''
""உங்க தங்கச்சி கூட இப்படி சிரிச்சி பேசியதைப் பார்த்ததே இல்லை''
""நான் பேசினது உன் தங்கச்சிகிட்ட''

-அ.ப.ஜெயபால், 
சிதம்பரம்.

(திருத்தங்கலில் நண்பர்கள் இருவர் பேசியது)

""மழை நிற்காதுன்னு சொல்றீயே ஏன்?''
""அதுக்குதான் கால் இல்லையே?''

-ஆர்.சுப்பு, 
திருத்தங்கல்.


(திருத்துறைப்பூண்டியில் உள்ள ஓரு சிற்றுண்டியில் நண்பர்கள் இருவர் பேசியது)

""டேய்! மச்சி ஃபாஸ்ட் புட் ஐயிட்டமெல்லாம் சாப்பிட்டு ரொம்ப அலுத்துப் போச்சுடா. 
செரிமானம் ஆகுற மாதிரி சாப்பிடலாமுன்னு இருக்கேன்''
""அதுக்குப் பேசாம சுக்கு டீயோ, சுக்கு காப்பியோ குடிச்சிட்டு தூங்குடா...''

-தா.முருகேசன், 
திருத்துறைப்பூண்டி.

யோசிக்கிறாங்கப்பா!

அரை அடி குழி தோண்டி ஆளுக்கொரு மரம் நட்டிருந்தால் 600 அடிக்கு போர் போட அவசியம் வந்திருக்காது.

- மோகனா அம்பி, 
கும்பகோணம்.

மைக்ரோ கதை

அமாவாசை இரவு.  கும்மிருட்டு. அச்சத்துக்கு இடையே மயானத்துக்கு நடுவே உள்ள ஒத்தையடிப் பாதையில், தனது கிராமத்துக்கு ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அங்கே ஒரு கல்லறையின் மீது இன்னொருவர் அமர்ந்திருந்தார். இதைக் கண்ட முதலாது நபர் வியர்வையில் நனைந்தார். ஒருவேளை ஆவியாக இருக்குமோ என்ற அச்சம் வேறு. 

திரும்பிச் செல்லவும் முதலாமவருக்கு அச்சம். கடவுளை நினைத்துகொண்டு முன்னேறினார். பின்னர்,  அருகே வந்தபோது தான் அவர் மனிதன் என்று தெரிந்தது.

பின்னர், ஆசுவாசப்படுத்திக் கொண்டு கல்லறை மீது அமர்ந்திருந்தவரை பார்த்துகிட்டு, ""டேய் லூசு. உட்கார இடமே இல்லையா? கல்லறை மேல உட்கார்ந்து இருக்கீயே..?'' என்றார்.

""அடேய்.. நீதான் லூசு.. எவ்வளவு நேரமாக உள்ளேயே படுத்திருக்கிறது. புழுக்கமா இருக்கில்லே.. அதான் காற்றோட்டமா வெளியிலே வந்து உட்கார்ந்திருக்கேன்.. சும்மா. போவியா..'' என்றார்.

இதை கேட்ட முதலாவது நபருக்கு தலை சுற்றியது.

எஸ்.ஆர்.கணேசன், 
குஜிலியம்பாறை.


எஸ்.எம்.எஸ்.

நேரத்தை வீணடிப்பவன் ஏழை. பயன்படுத்துபவன் பணக்காரன்.

-ந.சண்முகம், 
திருவண்ணாமலை.

அப்படீங்களா!

உலகம் முழுவதும் 200 கோடி பயன்பாட்டாளர்களை வைத்துள்ள வாட்ஸ் ஆப் அவ்வப்போது புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. தேவையான புதிய சில சேவைகளை ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

வாட்ஸ் ஆப்பில்  நாம்  எப்போது கடைசியாக பார்வையிட்டோம் "லாஸ்ட் சீன்'  என்பதை மறைக்க, செட்டீங்ஸ் -அக்கவுண்ட்- லாஸ்ட்சீன்-நோபடி  (யாரும் பார்க்க இயலாது). இதில் எவரி ஒன்  (யார் வேண்டுமானாலும்),  மை காண்டாட்க்ட்ஸ்  (கைப்பேசியில் பதிவு செய்யப்பட்ட எண்கள் மட்டும்) தேர்வு செய்தால்  அவர்கள் மட்டும் பார்க்க இயலும்.

பெறப்பட்ட பழைய தகவல்களைத் தேட வேண்டுமென்றால் சாட்ஸ்-சர்ச் தேர்வு செய்ய வேண்டும்.

சாட்டில் பதிவிடும் எழுத்துகள் தெளிவாக தெரிய எழுத்துகளுக்கு முன்பும் பின்பும் (*) ஹாஸ்டிரிக்கை பதிவு செய்து அனுப்ப வேண்டும். இதைபோல், (-) பதிவு செய்தும் பதிவிடலாம். 

கிடைக்கப் பெற்ற தகவல்களை நாம் படித்ததை பிறர் உறுதி செய்வதைத் தடுக்க, செட்டீங்ஸ்- அக்கவுண்ட்-பிரைவேசி- டர்ஆப் ரீட் ரிசீப்ட்ஸ் என்பதை தேர்வு செய்தால் போதும். 

வாட்ஸ்ஆப்பில் பிறரால் அனுப்பப்பட்ட பெரிய ஃபைல்களை அழித்து சேமிப்பு இடத்தை மீட்க வேண்டுமென்றால், செட்டீங்ஸ்-ஸ்டோரேஜ் அண்ட் டேட்டா- மேனேஜ் ஸ்டோரேஜ் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில் காண்பிக்கப்படும் பெரிய அளவிலான ஃபைல்களை தேர்வு செய்து அழித்துவிடலாம்.

வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்பட்ட தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால் அதை உங்கள் இமெயிலில் சேமிக்க, செட்டீங்க்ஸ்-சாட்ஸ்-எக்ஸ்போர்ட்சாட் என்பதை தேர்வு செய்ய வேண்டும். எந்த நபரின் சாட்டை சேமிக்க வேண்டுமா அதை தேர்வு செய்தால் இ-மெயில் டெக்ஸ்ட் பைலாக வந்துவிடும்.

அ.சர்ப்ராஸ்
 

முழு கட்டுரையைப் படிக்க →