திருக்குறளால் உத்வேகம்!
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் செவல்விளை தெருவைச் சேர்ந்த தொழிலாளி குருசாமி-முனியம்மாள் மகன் சுப்புராஜ் (27) கடின முயற்சியால் இந்திய வனப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளர்.
தினமணி கதிர்திருக்குறளால் உத்வேகம்!
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் செவல்விளை தெருவைச் சேர்ந்த தொழிலாளி குருசாமி-முனியம்மாள் மகன் சுப்புராஜ் (27) கடின முயற்சியால் இந்திய வனப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் செவல்விளை தெருவைச் சேர்ந்த தொழிலாளி குருசாமி-முனியம்மாள் மகன் சுப்புராஜ் (27) கடின முயற்சியால் இந்திய வனப் பணிக்கு (ஐ.எஃப்.எஸ்.) தேர்வு செய்யப்பட்டுள்ளர். திருக்குறள் அளித்த உத்வேகத்தால் இந்த வெற்றியை எட்ட முடிந்ததாகக் கூறுகிறார்.
இந்திய அளவில் ஐ.எஃப்.எஸ். தேர்வில் 57 -ஆவது இடத்தை பிடித்துள்ள அவர், செப்டம்பரில் நடைபெறவுள்ள சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.
அவரை சந்தித்தபோது, கூறியது:
""கடையநல்லூர் அருகேயுள்ள முத்துகிருஷ்ணாபுரம் என்ற சிற்றூர்தான் எனது ஊர். எனது அப்பா, கிடைக்கும் வேலையை செய்யக் கூடியவர். அம்மா இல்லத்தரசி. நான் முத்துகிருஷ்ணாபுரத்திலுள்ள ரத்னா பள்ளியில் ஆரம்ப வகுப்பையும், ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளியில் 12 -ஆம் வகுப்பு வரையும் தமிழ் வழியில் படித்தேன்.
கோவையில் ஏரோனாட்டிகல் பொறியியல் படித்தேன். இருப்பினும், வனத் துறை பணிக்குச் செல்ல விரும்பினேன். இதற்காக சென்னையில் இலவசப் பயிற்சி மையங்களில் சேர்ந்து கற்றேன்.
தமிழ் வழியில் படித்ததால் யுபிஎஸ்சி தரத்திலான ஆங்கிலத்தைக் கையாள்வதில் சிரமமாக இருந்தது. தினமும் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட ஆங்கில ஏடுகளை படித்ததால், எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. நண்பர்களுடன் தினமும் கலந்துரையாடி, தேர்வுகளை எழுதி போட்டி போடுவோம். அது நல்ல பலனை தந்தது.
6 ஆண்டுகளில் 6 முறை தேர்வை எதிர்கொண்டுள்ளேன். இதில் 2 முறை நேர்முகத் தேர்வை எட்டியுள்ளேன். 5 முறை மெயின் எழுதியுள்ளேன். தோல்வியை எதிர்கொண்டு மன வேதனையுடன் இருந்த போதெல்லாம், எனக்கு ஊக்கமளித்த தமிழ்நாடு பாடநூல் கழகத் துணை இயக்குநர் சங்கர் சரவணனின் உற்சாக வார்த்தைகள்தான் மீண்டும் மீண்டும் தேர்வை எதிர்கொள்ள தூண்டின.
அதுவும் அவர் கூறிய , "சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு என்ற திருக்குறள் வரிகள் உத்வேகத்தை அளித்தது. அதாவது, உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள் என்பதே இதன் அர்த்தம்.
வனப் பணியே லட்சியம் என்றாலும், சிவில் சர்வீஸ் தேர்வுகளையும் தமிழ் வழியில் எழுதினேன். ஒவ்வொரு முறையும் இரண்டு தேர்வையும் எழுதி வந்தேன்.
வனவர் பணி கிடைத்து, தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட திருச்செந்தூரில் பணியைத் தொடங்கினேன். 24 மணி நேரப் பணி என்பதால், தொடர்ந்து படிப்பதற்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை. பொருளாதாரமும் மிக அவசியமாக இருந்ததால், வேலையையும் விட முடியவில்லை.
இந்தச் சமயத்தில் எனக்கு மேலதிகாரியாக இருந்த ராஜ்மோகன், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறி தேர்வுக்குத் தயாராக உதவிகளைச் செய்தார்.
2014-இல் தமிழில் தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆன ஜெயசீலனைப் போல, தேர்ச்சி பெற விரும்பினேன்.
சிவில் சர்வீஸ் தேர்வை தமிழில் எழுதினேன். அதே சமயம் பாரஸ்ட் சர்வீல் தேர்வை ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும்.
ஊதியமில்லா விடுப்பு எடுத்து முயற்சி செய்தேன். பொருளாதாரப் பிரச்னையால் சிரமப்பட்டேன். அந்த நேரத்தில் நண்பர்களும், உறவினர்களும் கைகொடுத்தனர்.
மீண்டும் பணிக்குச் சென்றேன். கிடைத்த நேரத்தில் படித்தேன். அவசரப் பணிக்காக எந்த நேரமும் செல்ல வேண்டியதிருக்கும். இருப்பினும் அதையும் தாண்டி கிடைக்கும் கொஞ்ச நேரத்தை கூட பயன்படுத்தத் தவறியதில்லை. அந்த காலகட்டத்தில் வனச் சரகர் ரவீந்திரன் உதவி புரிந்தார்.
இதேபோன்று, பாரஸ்ட் சர்வீஸ் தேர்வை எழுதி வந்த எனது நண்பருடன் நாள்தோறும் ஆன்-லைன் மூலம் உரையாடி, தேர்வு குறித்தும், எழுதிய தேர்வுகளில் எங்கெல்லாம் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதையும் பேசி அதற்கான தீர்வை கண்டறிவோம்.
எனது நண்பர்கள் கூறியதால், மீண்டும் ஊதியமில்லா விடுப்பு எடுத்து சென்னையிலுள்ள அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு மையத்தில் சேர்ந்து படித்தேன். நேர்முகத் தேர்வு தொடர்பாக ஒத்திகை நேர்முகத் தேர்வையும் பல நிறுவனங்களில் செய்து பார்த்தேன்.
வனத் துறை அதிகாரி அபிஷேக் தோமர் உள்ளிட்டோர் உதவி செய்தனர்'' என்றார்.