முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி...

""உன்கிட்ட நெட் பேலன்ஸ் இருக்கா?''""இல்லை. இருந்த ரெண்டையும் மானுக்கு ஒன்னும்  முயலுக்கு ஒன்னும் விரிச்சிட்டேன்''

தினமணி கதிர்

சிரி... சிரி...

""உன்கிட்ட நெட் பேலன்ஸ் இருக்கா?''""இல்லை. இருந்த ரெண்டையும் மானுக்கு ஒன்னும்  முயலுக்கு ஒன்னும் விரிச்சிட்டேன்''

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
பகிர்:


""உன்கிட்ட நெட் பேலன்ஸ் இருக்கா?''
""இல்லை. இருந்த ரெண்டையும் மானுக்கு ஒன்னும்  முயலுக்கு ஒன்னும் விரிச்சிட்டேன்''

-ச.அரசமதி, தேனி.

""ஏங்க... நேத்து அடிபட்டதுக்கு நம்ம பையன் ஏன் இன்னிக்கு அழுவுறான்?''
""நேத்து லீவு. இன்னிக்கு ஸ்கூல் போகணும்ல. அதான்''

-நா.வினோத்குமார்,
அரக்கோணம்.

""டி.வி.க்கும் செய்திப் பேப்பருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?''
""டி.வி.யால் கொசுவை விரட்ட முடியாது.. சார்!''


-அப்துல் ஹாதி,
கடையநல்லூர்.

""குழந்தை அழுறது தெரியாம.. சீரியல் பார்க்கறியே..
 நீங்க வேற.. ""டி.வி. சீரியலைப் பார்த்துதான் குழந்தை அழுவுது''

-எஸ்.மகாலட்சுமி,
காரைக்கால்.



""நீங்க எல்லா மெட்டிலும் ட்யூன் போடுவீங்களா சார்''
"" ஓ.. போடுவேனே தம்பி..''
""அப்போ இந்த ஹெல்மெட்டில் ட்யூன் போடுங்க பார்ப்போம்''

-இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

""போம்மா எப்ப பார்த்தாலும் ஆயா வடை சுடுற கதை சொல்லி யே சோறு ஊட்டுற?''
""வேறு எந்தக் கதை வேணும்''
""பர்கர், பீட்சா கடையில நாய் புகுந்து எடுக்கற மாதிரி கதை சொல்லும்மா''

-வண்ணை கணேசன்,
சென்னை.

முழு கட்டுரையைப் படிக்க →