முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி...

""55-ன்னு எழுதச் சொன்னேனே!  5 மட்டும்தான் எழுதியிருக்கே..?''""ஆமாம் சார்... அதை இடப்பக்கம் போடணுமா? வலப்பக்கம் போடணுமா?''

Updated On : 24 ஜூலை, 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:22 PM


""55-ன்னு எழுதச் சொன்னேனே!  5 மட்டும்தான் எழுதியிருக்கே..?''
""ஆமாம் சார்... அதை இடப்பக்கம் 
போடணுமா? வலப்பக்கம் போடணுமா?''

-அப்துல் ஹாதி,
கடையநல்லூர்.

""வீட்டு வேலை செய்ய என்ன பணம் கேட்கிறே!''
""வீட்டு வேலை செய்ய ரூ.2 ஆயிரம்.  மற்ற வீடுகளில் உங்க வீட்டு விஷயம் சொல்லாமல் இருக்க ரூ.2,500. மற்ற வீட்டு விஷயங்கள் உங்ககிட்ட சொல்ல ரூ.500.''

Advertisement

-டி.கே.சுகுமார்,
கோவை.

""இந்த ஏரியாவுல "எம்ஆர்பி' எவ்வளவு?''
""நிலம் விலை கேக்கறீங்களா...?''
""இல்லை.. வோட்டுக்கு என்ன விலைன்னு கேட்டேன்''

-சம்பத்குமாரி,
பொன்மலை.

""ஜப்பானில் இருக்கிறங்களுக்கு "கொசு'ன்னா என்னன்னே தெரியுதுடா''
""ஏன்.. அங்க கொசுவே கிடையாதா?''
""கொசுங்கிற தமிழ் வார்த்தைக்கு அவங்களுக்கு எப்படிடா அர்த்தம் தெரியும்...!''

-இரா.அருண்குமார்,
புதுச்சேரி.

""ஆமா.. உனக்கு இரட்டை  குழந்தை பிறந்ததே இப்போ என்ன செய்யறாங்க...?''
""அவங்க இரண்டு பேரும் சேர்ந்து ஜெராக்ஸ் கடை வைச்சிருக்காங்க..''

-வண்ணை கணேசன்,
சென்னை.

""யானை பெரிசா..? பூனை பெரிசா..? நீ சொல்லு''
""அதுங்களோட பர்த் சர்டிபிகேட்டை கொடுங்க சார்.. பார்த்து சொல்றேன்..''

-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.