முகப்பு
தினமணி கதிர்

விசுவேசுவரய்யா நூலுக்கு முன்னுரை எழுதிய ஜி.டி.நாயுடு

சர் எம். விசுவேசுவரய்யா எழுதிய "என் பதவிக்கால நினைவுகள்' எனும் நூலுக்கு வழங்கிய முன்னுரையில் தொழில் மேதை ஜி.டி.நாயுடு கூறியிருப்பதாவது;

Updated On : 5 ஜூன், 2022 at 6:12 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:57 PM

சர் எம். விசுவேசுவரய்யா எழுதிய "என் பதவிக்கால நினைவுகள்' எனும் நூலுக்கு வழங்கிய முன்னுரையில் தொழில் மேதை ஜி.டி.நாயுடு கூறியிருப்பதாவது;

நாங்கள் எல்லோரும் மூக்குக் கண்ணாடியை அணிந்தபடி படிப்பதை விசுவேசுவரய்யா கவனித்து, தானும் ஒரு பத்திரிகையை எடுத்துக் கண்ணாடியில் உதவியின்றி படிக்க ஆரம்பித்தார்.

""கண் பார்வையை சரிவரப் பாதுகாப்பதற்கு, தினமும் விழிகளை இடதுபுறமும், வலதுபுறமும் 70 தடவைகளும், மேலும் கீழுமாக 40 தடவைகளும் அசைத்து, பிறகு கண் இமைகளை விரல்களினால் சில விநாடிகள் அழுத்திவிட வேண்டும்'' என்ற ஓர் எளிய பயிற்சியை எனக்குச் சொல்லி கொடுத்தார். 

Advertisement

"இந்த முறையை விடாமல் அனுசரித்தால் கண்ணாடியின் உதவியில்லாமல், படிப்பதற்கு உங்கள் கண்கள் எப்போதும் தயாராக இருக்கும். மேலும், தேவையான அளவுக்குச் சாப்பிட்டு, நல்ல ஆய்வும் தூக்கமும் பெற வேண்டும். தினமும் சில மைல்கள் தூரமாவது காலாற நடந்தால், உறக்கம் தன்னால் வந்துவிடும்! என்றும் அந்தப் பெரியவர் சொன்னார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.