முகப்பு
தினமணி கதிர்

திரைக்கதிர்

"தர்பார்' படத்திற்குப் பின்  மீண்டும் லைகாவிற்காகா  இரண்டு படங்கள் நடிக்கிறார் ரஜினி. 

Updated On : 6 நவம்பர், 2022 at 6:00 AM
பகிர்:


'தர்பார்' படத்திற்குப் பின்  மீண்டும் லைகாவிற்காகா  இரண்டு படங்கள் நடிக்கிறார் ரஜினி. 'ஜெயிலர்' பட அறிவிப்புக்கு முன்பே, இந்தக் கூட்டணி உறுதியான போதும், "டான்' படத்துக்குப் பிறகுதான் இதற்கான பணிகள் வேகம் எடுத்தன. 

இதற்காக ரஜினி இளம் இயக்குநர்கள் பலரிடமும் கதைகள் கேட்டு வந்தார். "ஜெயிலர்' படப்பிடிப்பின் இடையே கூட, சிலர் அவரிடம் கதைகள் சொல்லியுள்ளனர். ஹெச்.வினோத், தேசிங்கு பெரியசாமி, பி.எஸ்.மித்ரன், சிபி சக்ரவர்த்தி, "ஜெய் பீம்' த.செ.ஞானவேல், அருண்ராஜா காமராஜா, தெலுங்கு "பிம்பிசாரா' பட இயக்குநர் மல்லிடி வாசிஷ்டா என அந்தப் பட்டியல் நீள்கிறது.

--------------------------------------------------

Advertisement

"விக்ரம் வேதா', "காலா', " ஜெய் பீம்' உள்ளிட்ட பல படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் முதல் முறையாக தனி கதாநாயகனாக நடித்து முடித்து இருக்கிறார். பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார்.  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.  மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் குறட்டை பிரச்னையை மையமாக வைத்து நகைச்சுவையுடன் இணைந்த ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படமாக உருவாக்கி இருக்கின்றனர். சென்னையை சுற்றி ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கின்றனர்.

--------------------------------------------------

பிஜிஎஸ் புரொடக்சன்ஸ்  நிறுவனம் தயாரித்துள்ள படம் " 3.6.9.'   இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடிக்கிறார்.  உலக சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், ஒரு களத்தில் 24 கேமிராக்கள், 150-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைள், 450தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஷரிபா மூலமாக பரிந்துரை செய்யப்பட்டு அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் வேர்ல்டு ரெக்கார்டு என்ற அமைப்பில் உலக சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.