தினமணி கதிர்

எவ்ளோ பெரிசு...!

குஜராத் மாநிலத்தில்தான் இந்தியாவின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்துள்ளது.

பிஸ்மி பரிணாமன்

குஜராத் மாநிலத்தில்தான் இந்தியாவின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்துள்ளது. இப்போது உலகின் மிகப் பெரிய அலுவலக வளாகம், சூரத் வைர வர்த்தகத்துக்காக, பிரதமர் நரேந்திர மோடியால் டிசம்பர் 17-இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரமாண்டங்களின் பின்னணியில் இருப்பவர் அவர்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தலைமையகமான 'பென்டகன்' கட்டடம்தான் 80 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகமாக இருந்தது. சூரத் வைர வர்த்தக வளாகம், 'பென்டகன்' கட்டடத்தைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
சூரத் நகரத்தில்தான் உலகின் 90 சதவீத வைரங்கள் பட்டை தீட்டப்படுகின்றன. இனி வைரம் பற்றி உலகில் எந்தவொரு மூலையில் யார் பேசினாலும் சூரத் வர்த்தக மையமும் பேச்சுகளில் இடம் பெறும்.

சூரத் வைர வர்த்தக மையத்தின் சிறப்புகள்:

35 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் 9 செவ்வக வடிவத்தில் அமைந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டடத்திலும் 15 தளங்கள் உள்ளன. 15 கட்டடங்களின் மொத்த பரப்பளவு சுமார் 67 லட்சம் சதுர அடிகள். ஒரே சமயத்தில் இந்த வர்த்தக மையத்தில் 65 ஆயிரம் பேர் பணியாற்ற முடியும்.
'கனவு நகரம்' என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த வளாகத்தின் நோக்கமே ஒரு குடைக்குக் கீழ் வைர வர்த்தக அலுவலகங்களைக் கொண்டுவருவதுதான்.
வைர வர்த்தகத்துக்குப் பிரபலமான சூரத் நகரில் பல இடங்களில் ஆயிரக்கணக்கான வர்த்தக நிலையங்கள் செயல்படுகின்றன. அவற்றில் சுமார் 4,500 வைர வர்த்தக அலுவலகங்களை இந்தப் புதிய வளாகத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். இந்த வளாகத்தில் வைர ஏற்றுமதி, இறக்குமதிக்கு ஊக்கம் தரும் விதத்தில், ஏற்றுமதி, இறக்குமதிக்கான சுங்க அனுமதி அலுவலகம், சில்லறை நகை வர்த்தகத்துக்கான வளாகம், சர்வதேச வங்கி வசதிகள், பாதுகாப்புப் பெட்டகங்கள் போன்ற வசதிகளும், சேவை மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் 131 'லிஃப்ட்'கள் செயல்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நவராத்திரி கொலு தொடக்கம்

டாஸ்மாக் கடை அருகே பதுக்கிவைக்கப்பட்ட 415 மதுப் புட்டிகள் பறிமுதல்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தூய்மைப் பணியாளா்கள் அவமதிப்பு: அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

சிறுபான்மையின இஸ்லாமிய மாணவா்களுக்கு வெளிநாடுகளில் பயில கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT