முகப்பு
தினமணி கதிர்

நாராயணமூர்த்தியின் நற்குணங்கள்...!

""நாராயணமூர்த்தியின் நற்குணங்களால் கவரப்பட்டு திருமணம் செய்துகொண்டேன்'' என்கிறார் இன்போசிஸ்  பவுண்டேஷனின் முதன்மை அறங்காவலர் சுதா மூர்த்தி.

Updated On : 15 ஜனவரி, 2023 at 6:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:13 AM

"நாராயணமூர்த்தியின் நற்குணங்களால் கவரப்பட்டு திருமணம் செய்துகொண்டேன்'' என்கிறார் இன்போசிஸ்  பவுண்டேஷனின் முதன்மை அறங்காவலர் சுதா மூர்த்தி.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இன்போசிஸ் நிறுவனம் உலகில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதனை நிர்வகிக்கும் சுதா மூர்த்தி கூறியதாவது:

"நாராயணமூர்த்தியை திருமணம் செய்துகொள்ள நான் முடிவு எடுத்தபோது, என் வீட்டில் அதற்கு எதிர்ப்பு எழுந்தது.

Advertisement

அப்போது,  நாராயணமூர்த்தி தன்னை நிரூபிக்காத பொறியாளராக இருந்தார். உண்மையைச் சொல்லணும்னா அவர் வேலை இல்லாமல் இருந்தார்.

நான் மட்டும் அன்று பணத்துக்கு மதிப்பு அளித்திருந்தால்,  அவரை திருமணமே செய்திருக்க முடியாது. ஏனென்றால், அவரிடம் அப்போது எதுவும் இல்லை.

இருந்தாலும், அவரிடம் நற்குணங்கள் இருந்தன. வேலையில் மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்தார்.  அதற்கான மனநிலை, நன்கு படித்த பட்டதாரி, நேர்மையான குணம் ஆகியன  என்னை மிகவும் கவர்ந்தது.

இதனால் விடாப்பிடியாக நின்று, திருமணம் செய்துகொண்டேன்'' என்றார் சுதா மூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.