வர் போலி மருத்துவர்தான்னு எப்படி சொல்றே?'
'வெளிநாடுகளில் போய் நாட்டு வைத்தியம் படிச்சிட்டு வந்ததா சொல்லிக்கிறாரே?'
கி.வாசுதேவன்,
தஞ்சை
'டாக்டர். என் வயிற்றில் ஒரு போர் நடக்கிற மாதிரி இருக்கே?'
' ஏங்க அக்கப் போர் பண்றீங்க?'
மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி.
'இந்த ஒரு மாத்திரையில பத்து கீரைக்கட்டுல இருக்கிற சத்து இருக்கு!'
'பத்து கட்டு கீரையை ஒரேடியா சாப்பிட்டா செரிமானம் ஆகுமா டாக்டர்!'
என்.கே.மூர்த்தி,
சென்னை.
'ஆபரேஷனுக்கு பிறகு வலி இருக்கிறதே டாக்டர்!'
'நான் ஆபரேஷன் பண்ணின யாருமே ஆபரேஷனுக்கு பிறகு வலிக்குதுன்னு சொன்னதே இல்லை!'
'உங்களுக்கு நெஞ்சில் கோழை அதிகமாக உள்ளது மன்னா!'
'கபம் என்று சொல்லுங்க வைத்தியரே!'
'உடம்புல கொழுப்பு அதிகமாக இருக்குன்னு பிளட் டெஸ்ட் பண்ணாமலே எப்படி சொல்றீங்க டாக்டர்!'
'உங்களோட பேச்சிலே கண்டுபிடிச்சேன்!'
'மாத்திரையே போதும்னு டாக்டர் சொல்லியும் எதுக்கு ஊசி குத்த சொல்றீங்க..!'
'இல்லீங்க நர்ஸ்.. நீங்க தடவி விடுவீங்களே அதான்!'
'இடம் மாறி படுத்தா எனக்கு தூக்கமே வராது டாக்டர்!'
'அப்படியா?'
'அதனால்தான் எங்க ஆபிஸில் டிரான்ஸ்பருக்கு பயந்து பிரமோஷனையே வேண்டாமுன்னு சொல்லிட்டேன்.'
-வி.ரேவதி,
தஞ்சை.
'அந்த டாக்டருக்கு குழந்தை மனசா?'
'பீஸூக்கு பதிலாக சாக்லெட்டுகள் கொடுத்தால் போதுமாம்!'
'ஆபரேஷன் பண்ணா உங்க மாமியார் உடம்பு தாங்காது!'
'தெரியும் டாக்டர். அதனால்தான் பண்ண சொல்றேன்!'
'நீங்க ஏன் கண்ணை மூடினு விஸ்கியை மடக், மடக்னு குடிக்கறீங்க ?'
'டாக்டர்தான் என்னை குடியை கண்ணால பார்க்க கூடாதுன்னு சொல்லி இருக்காரு!'
'கவுன்சிலரு ஏன் இந்தப் படை போதுமான்னு கோஷம் போட்டுனு எங்க போறாரு ?'
'ஸ்கின் டாக்டர் வீட்டுக்கு போறாரு !'
'டாக்டர் என் கையால உங்களுக்கு பீஸ் கொடுக்கணும்னு ஆசை !'
'அப்ப ஆபரேஷனுக்கு முன்னாடி பீஸை கொடுத்துடுங்க !'
'நீங்கதானே டாக்டர் சொன்னீங்க? அரிசி பொறி சாப்பிட்டால் நல்லா பசி எடுக்கும்னு!'
'ஆமாம். அதுக்காக ஒரு மூட்டை அரிசி பொறி சாப்பிட்டா எப்படி பசிக்கும்!'
'என் கணவர் தூக்கத்துல டி.வி. போடுறாரு டாக்டர்'
'சரி இதுக்கு போய் ஏன் ரொம்ப வருத்தப்படறீங்க?'
'அவரு தூக்கத்தில் டி.வி. போடுறது மாடியிலிருந்து டாக்டர்..!'
தீபிகா சாரதி,
சென்னை.