தனுஷின் 50ஆவது படத்தை அவரே இயக்குவது என்பதில் மிக உறுதியாக இருக்கிறார் தனுஷ். தாணு, அன்புச்செழியன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள், "நடிப்பில் மட்டும் தீவிரம் காட்டுங்கள்' என வலியுறுத்திய நிலையிலும், இந்த ஒரு படத்தை மட்டும் நான் இயக்குகிறேன் என உறுதி காட்டுகிறாராம் தனுஷ். படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவைப் பேசி முடித்திருக்கும் தனுஷ், கதையின் மற்ற விஷயங்களையும் அவருடன் கலந்து பேசி விவாதித்து வருகிறாராம். தன் தனிப்பட்ட குடும்ப விவகாரங்களைக் கதையின் அழுத்தமான சென்டிமென்ட் பகுதியாகச் சேர்த்திருக்கிறாராம்.
----------------------------------------------
"ரெ ஜினா' என்ற படத்தின் மூலம், தமிழில் கம்பேக் ஆகிறார், சுனைனா. இது ஒரு க்ரைம் த்ரில்லர். மலையாளத்தில் "பைப்பின் சுவட்டிலே பிரணயம்', "ஸ்டார்' படங்களை இயக்கிய டொமின் டி சில்வா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். ""என் திரைப் பயணத்தில் "ரெஜினா' முக்கியமான படமாக இருக்கும். இந்தப் படத்திற்காக கடினமா உழைத்திருக்கிறேன்'' என்று நம்பிக்கை பொங்கக் காத்திருக்கிறார் சுனைனா.
----------------------------------------------
மேகா ஆகாஷூக்கு திருமணம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து மேகா ஆகாஷின் அம்மாவிடம் பேசினால்... ""ட்விட்டரில் மேகாவுக்குக் கல்யாணம் என்று யாரோ எழுதி இருக்கிறார்கள். அந்தப் பதிவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. மேகாவுக்குக் கல்யாணம் என்றால் அதை நாங்களே முறைப்படி அறிவிப்போம். மேகா நடித்த படங்களோட ரிலீஸ் அப்போ கூட இத்தனை பேர் கால் பண்ணிப் பேசினதில்ல. மேகாவுக்கு கல்யாணமான்னு நிறைய போன் கால்ஸ் வருகிறது. ஆனால், இது தவறான செய்தி." என மேகா ஆகாஷின் அம்மா தெரிவித்தார்.
----------------------------------------------
"விடுதலை 2' படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, சூர்யாவின் "வாடிவாசல்' படத்தைத் தொடங்க நினைத்தார் இயக்குநர் வெற்றிமாறன். ஆனால் சூரி தேதி கொடுத்தும், விஜய் சேதுபதியை விரட்டிப் பிடிக்க முடியாத நிலையாம். விடுதலை பாகம் ஒன்றில் கிளம்பிய மொத்த விமர்சனங்களுக்கும் பதில் சொல்லும்விதமாக, பாகம் இரண்டை எடுக்க இன்னமும் நிதானம் காட்ட நினைக்கிறாராம் வெற்றிமாறன். அதனால், "வாடிவாசல்' படத்தின் பாதி ஷூட்டை முடித்துவிட்டு, பிறகு "விடுதலை' படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கலாம் என நினைக்கிறாராம்.
----------------------------------------------
படப்பிடிப்புக்காக மும்பையில் தங்கியிருந்த நாள்களில், முதுகுவலிக்காகச் சிகிச்சைக்குச் சென்ற இடத்தில் பிசியோதெரபிஸ்டான டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் அறிமுகம் உண்டானது. நாளடைவில் பிரபுதேவா ஹிமானி சிங் உடனான நட்பு காதலாக மாற, இருவீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் ஹிமானி சிங்கைக் கரம்பிடித்தார் பிரபுதேவா. இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் எக்ஸ்க்ளூசிவ் தகவல் என்னவெனில், பிரபுதேவாஹிமானி சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.