சிரி... சிரி...
""என்னப்பா சர்வர்! இட்லியா இது. கேப் வெடி சைஸில் இருக்கே?''""சார். ஒரு பாக்கெட் மாவு வாங்கி யாருக்கும் இல்லைன்னு சொல்லாம இட்லி தர்றாரு எங்க முதலாளி. சைஸ் பார்க்காதீங்க?''
தினமணி கதிர்சிரி... சிரி...
""என்னப்பா சர்வர்! இட்லியா இது. கேப் வெடி சைஸில் இருக்கே?''""சார். ஒரு பாக்கெட் மாவு வாங்கி யாருக்கும் இல்லைன்னு சொல்லாம இட்லி தர்றாரு எங்க முதலாளி. சைஸ் பார்க்காதீங்க?''
""என்னப்பா சர்வர்! இட்லியா இது. கேப் வெடி சைஸில் இருக்கே?''
""சார். ஒரு பாக்கெட் மாவு வாங்கி யாருக்கும் இல்லைன்னு சொல்லாம இட்லி தர்றாரு எங்க முதலாளி. சைஸ் பார்க்காதீங்க?''
-பி.பாலாஜி கணேஷ்,
சிதம்பரம்.
""மன்னா. எதிரி ரொம்ப புது டெக்னிக்குக்கு மாறிட்டான்!''
""ஏன்அமைச்சரே அப்படி சொல்றீங்க!''
""போர் ஓலையை புறாவுக்கு பதில் ட்ரோனில் கட்டி அனுப்பி இருக்கான்''
-கு.அருணாசலம்,
தென்காசி.
""டாக்டர். எனக்கு எதைப் பார்த்தாலும் ரெண்டா தெரியுது.''
""நீங்க பீஸ் கொடுத்த ஆயிரம் ரூபாயில் ரூ.500 ஒரு நோட்டுதான் இருக்கு!''
- பி.பரத்,
சிதம்பரம்.
""என்னங்க. காப்பி வேணுமா?, டீ வேணுமா?''
""எது கேட்டாலும் வெந்நீர் தானே தர்றபோற! இதென்ன கேள்வி.''
-பி.கவிதா,
சிதம்பரம்.
""என்ன! தோசை ரொம்ப வெயிட்டா இருக்கு?''
""இது கல் தோசைங்க அதான்!''
"இந்த வழக்கு தொடர்பாக, நீ ஏதாவது சொல்ல விரும்பறியா?''
""ஆமாங்க. எஜமான். வக்கீல் பீஸ் கேட்டு ரொம்ப டார்ச்சர் பண்றாரு. அவரை கண்டிச்சி வையுங்க!''
""பிரேக் டவுன் ஆனா பஸ் ஏன் இப்படி எல்லாரும் தள்ளி கூட இன்னும் ஸ்டார்ட் ஆகலை!''
""எப்படி ஸ்டார்ட் ஆகும் டிரைவரும் இறங்கி தள்ளிறாரே?''
""என்ன. இட்லி மல்லிப் பூ வாசனை வருது!''
""எங்க ஓட்டல் இட்லி மல்லிகைப் பூ மாதிரி இருக்கும் சார்.''
""உனக்கு என்ன தைரியும் இருந்தா போலீஸ்காரர்கிட்டயே திருடுவே!''
""வாழ்க்கையில் ஒரு த்ரில் வேண்டமா சார்!''
""சார். நான் ஒர்க் ப்ரம் ஹோம் செய்யட்டுமா?''
""அதெல்லாம் ஆபிஸில் வேலை இருக்கிறவங்களாலதான் பண்ண முடியும்!''
""என்ன அந்த பல் டாக்டர்கிட்ட ஏகப்பட்ட கூட்டம்!''
""அவரு வாஸ்து முறையில் பல் கட்டுவாரு... அதான்!''
-தீபிகா சாரதி,
சென்னை.