முகப்பு
தினமணி கதிர்

லைகா எனும் பிரம்மாண்டம்!

தமிழ் சினிமாவில் ஒரே சமயத்தில் பல படங்களைத் தயாரித்த நிறுவனங்கள், தயாரிப்பாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

Updated On : 5 மார்ச், 2023 at 6:00 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:09 PM

தமிழ் சினிமாவில் ஒரே சமயத்தில் பல படங்களைத் தயாரித்த நிறுவனங்கள், தயாரிப்பாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் லைகாவையும் சொல்லலாம். "பொன்னியின் செல்வன் - 1' படத்துக்குப் பின் மளமளவெனப் பல படங்களைத் தயாரித்து வருகிறது அந்த நிறுவனம். விஜயின் "கத்தி' மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த லைகா, இப்போது இரண்டு டஜன் படங்களைத் தாண்டி தயாரித்துவிட்டது.

இந்தியன் 2: ஷங்கர் - கமலின் "இந்தியன் 2'க்கு மீண்டும் உயிர்கொடுத்தது. "இந்தியன் 2' படப்பிடிப்பு இப்போது திருப்பதி, கடப்பா ஆகிய இடங்களில் நடந்தது என்றும், விரைவில் தென்னாப்பிரிக்காவிற்கு டீம் பறக்கிறதும் என்றும் சொல்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் - 2: "பொன்னியின் செல்வன் - 2' படத்தின் டப்பிங் முழுவதும் நடந்து முடிந்துவிட்டது. அதன் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் 28. கிராபிக்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்துவருகின்றன.

Advertisement


அஜித் 62: "துணிவு' படத்திற்குப் பின் அஜித்தின் 62-ஆவது படத்தை லைகா தயாரிக்கிறது என்றும், விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் அறிவித்தனர். அதன்பிறகு விக்கி வெளியேறிவிட்டார். அவர் ஏன் வெளியேறினார், என்ன நடந்தது என்பதும், மகிழ் திருமேனி "ஏகே 62'க்கு எப்படி வந்தார் என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. இப்போதைக்கு மகிழ் திருமேனி இயக்குவது விரைவில் உறுதியாகிவிடும் என்கிறார்கள். மகிழ், அஜித்தைச் சந்தித்ததும், கதை சொன்னதும் உண்மை. ஆனால், இன்னமும் முத்தரப்பு பேச்சு வார்த்தைகள் நீடித்து வருவதாகச் சொல்கிறார்கள்.

சந்திரமுகி 2: ராகவா லாரன்ஸ் - பி.வாசு இணைந்த "சந்திரமுகி 2' படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் கூட, "கிழக்கு சீமையிலே' விக்னேஷ் இதில் இணைந்திருந்தார். வடிவேலுக்கு "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' கைவிட்டதால் அவர் "மாமன்னன்' படத்தையும், "சந்திரமுகி 2'ஐயும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

லால் சலாம்: ஐஸ்வர்யா ரஜினியின் "லால் சலாம்' படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. விஷ்ணு விஷால், விக்ராந்த், அனு இமானுவேல் எனப் பலரும் இதில் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரஜினி இதில் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். விதார்த், யோகி பாபு இணைந்து நடிக்கும் படத்தை டி.அருள்செழியன் இயக்கி வருகிறார். இதனையடுத்து ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரோஹின் வெங்கடேசன் இயக்கும் படத்தையும் தயாரிக்கிறது லைகா.

லைகாவின் 24- ஆவது படமாக, பாரதிராஜா, அருள்நிதி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரீஷ் பிரபு ஒரு படத்தை இயக்கி வருகிறார். "திருவின் குறள்' என இதற்கு டைட்டில் வைத்திருப்பதாகத் தகவல். சமீபத்தில் திரைக்கு வந்த "டாடா' படத்தின் இயக்குநர் கணேஷ் கே.பாபு, அடுத்து லைகாவுடன் கைகோர்க்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.