தினமணி கதிர்

திரைக் கதிர்

"ஜெய் பீம்' படம் ரிலீஸாகி இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி ட்வீட் மூலமாக அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் சூர்யா.

தினமணி

"ஜெய் பீம்' படம் ரிலீஸாகி இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி ட்வீட் மூலமாக அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் சூர்யா. தற்போது ரஜினியை வைத்துப் படம் இயக்கி வரும் இயக்குநர் த.செ.ஞானவேல், அடுத்து சூர்யாவுடன் இணைவது உறுதியாகியிருக்கிறது. ரஜினி படத்தைத் தொடங்கும் முன்னரே ஞானவேல் சொன்ன ஒன்லைன் சூர்யாவுக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டதாம். மல்ட்டி ஸ்டார்ஸூக்கான கதை என்பதால், மற்ற ஹீரோக்களிடம் இப்போதே அடுத்த வருடத்துக்கான தேதி வாங்கும் வேலைகள் தீவிரமாகியிருக்கின்றனவாம்.

----------------------------------------------------


"லியோ' சக்சஸ் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபுவின் படத்துக்காக பாங்காக்குக் கிளம்பியிருக்கிறார் விஜய். இரண்டு வாரங்கள் பாங்காக்கில் ஷூட் முடித்துவிட்டு இன்னும் சில நாடுகளுக்குக் கிளம்ப விருக்கிறார்களாம். "இந்தப் படத்தை முடித்துவிட்டு, இரண்டு வருடங்களுக்கு ஓய்வு' என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறாராம். ஆனால், "லியோ' படத்தின் தயாரிப்பாளர் லலித், "அடுத்த வருடத்தில் இன்னொரு படம்' என விஜய்யிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறாராம். ஆனாலும், விஜய் அசைந்து கொடுக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

----------------------------------------------------


விஜய்யின் "லியோ' படத்துக்கு எதிராகக் கிளம்பிய விமர்சனங்கள், படத்தின் வசூலைக் கொஞ்சமும் பாதிக்கவில்லையாம். ரஜினியின் "ஜெயிலர்' வசூலுக்குக் குறைவில்லாத வகையில் தயாரிப்பாளர் லலித்துக்கு லாபம் கொடுத்திருக்கிறதாம் "லியோ.' ஆனால், "படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு "லியோ' விமர்சனரீதியாகக் கடும் பாதிப்பை உருவாக்கியிருக்கிறது. கூடவே, சம்பளரீதியாகத் தன்னை இன்னும் உயர்த்திக்கொள்ள நினைத்த லோகேஷின் கனவையும்  கலைத்துப் போட்டு "50சி' என்கிற அடைப்புக் குறிக்குள்ளேயே வைத்திருக்கிறது' என்கிறார்கள் விவரப்புள்ளிகள்.

----------------------------------------------------

"இந்தியன்' படத்தின் வரவேற்பிற்குப் பிறகு, கமலின், "வீரசேகரன் சேனாபதி' எனும் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தயாரிப்பு சிக்கலுக்குப் பிறகு லைகா சுபாஸ்கரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் தற்போது "இந்தியன் 2' மட்டுமல்ல "இந்தியன் 3'-ம் ரெடியாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் "இந்தியன் 2' படத்தின் இன்ட்ரோ வீடியோ வெளியாகியுள்ளது. "இந்தியன்' முதல் பாகத்திற்கு ரஹ்மான் இசையமைத்து எல்லாப் பாடல்களும் மாபெரும் ஹிட்டாக அமைந்தது. இப்படத்திற்குத் தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி வரும் அனிருத் இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

SCROLL FOR NEXT