முகப்பு
சூர்யா
தினமணி கதிர்

திரைக் கதிர்

ரஜினியின் "வேட்டையன்', சூர்யாவின் "கங்குவா' ஆகிய படங்கள் ஆயுத பூஜைக்கு கண்டிப்பாக வந்து விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

தினமணி கதிர்

திரைக் கதிர்

ரஜினியின் "வேட்டையன்', சூர்யாவின் "கங்குவா' ஆகிய படங்கள் ஆயுத பூஜைக்கு கண்டிப்பாக வந்து விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 6:30 PM
சூர்யா
பகிர்:

ரஜினியின் "வேட்டையன்', சூர்யாவின் "கங்குவா' ஆகிய படங்கள் ஆயுத பூஜைக்கு கண்டிப்பாக வந்து விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அதற்கான ஏற்பாடுகளும் முழுமையாக நடந்து பட வேலைகள் முடிக்கப்பட்டு வந்தன. ஆனால், விநியோகஸ்தர்கள் சங்கம் இரண்டு படத்தின் தயாரிப்புத் தரப்பை சந்தித்து, "யாராவது ஒருவர் 15 நாள்களாவது வெளியீட்டுத் தேதியைத் தள்ளி வையுங்கள். அப்போதுதான் எங்களால் வசூல் நிலவரம், ஏற்பாடுகளைக் கணித்துச் செய்ய முடியும்' என்று சொல்லியிருக்கிறார்கள். ஆக, இரண்டில் ஒரு படம் தள்ளிப்போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

வயநாடு மாவட்டத்திலுள்ள சூரல்மலை, முண்டகை ஆகிய மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நடிகை நிகிலா விமல் கேரளாவிலுள்ள அமைப்புகளுடன் இணைந்து நிவாரணத்துக்காக பல உதவிகளைச் செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த பேரிடர் நிவரணத்துக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் உதவிகரம் நீட்டியுள்ளனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து 50 லட்சம் ரூபாயை கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். விக்ரம் 20 லட்சம் ரூபாய் தந்திருக்கிறார். நயன்தாரா, விக்னேஷ்சிவன் இருவரும் இணைந்து 20 லட்சம் ரூபாய் தந்துள்ளார். மோகன்லால் ரூ.3 கோடியை நிவாரணமாக கேரள அரசுக்கு வழங்கியிருக்கிறார்.

விஜய் நடித்திருக்கிற "தி கோட்' திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகிறது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் விஜய் டபுள் ஆக்ஷ்னில் நடிக்கிறார். இந்த டபுள் ஆக்ஷனில் இளம் வயது விஜய் கதாபாத்திரத்துக்கு டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிளான "ஸ்பார்க்' பாடல் நேற்றைய தினம் வெளியானது. இந்தப் பாடலை இயக்குநர் வெங்கட் பிரபுவின் தந்தையான கங்கை அமரன் எழுதியிருக்கிறார். இந்த பாடலிலும் இளம் வயது விஜய் கதாபாத்திரத்தை டீ ஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் "தக் லைஃப்' படப்பிடிப்பை விரைவில் அவர் முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்தடுத்த படங்களுக்குச் செல்கிறார் சிம்பு. மலையாளத்தில் "2018' படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப்பின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தக் கதை ரொம்பவே வித்தியாசமான கதை என்றும், சிம்புவின் படங்களிலேயே பெரிய பட்ஜெட் படமாகவும் இது அமையும் என்றும் சொல்கிறார்கள். ஒருசில கோடிகள் பட்ஜெட்டிலேயே முழுப்படமும் முடித்துக் கொடுத்துவிடும் மலையாள திரையுலகில், ரூ.26 கோடி பட்ஜெட்டில் "2018' படத்தை இயக்கியிருந்தார் ஜூட் ஆண்டனி. இப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →