திரைக் கதிர்
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகப்போகும் திரைப்படம் "வாடிவாசல்'.
தினமணி கதிர்திரைக் கதிர்
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகப்போகும் திரைப்படம் "வாடிவாசல்'.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகப்போகும் திரைப்படம் "வாடிவாசல்'. சி.சு.செல்லப்பாவின் "வாடிவாசல்' நாவலை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகவிருக்கிறது. "விடுதலை' இரண்டாம் பாகத்தின் வெளியீட்டிற்குப் பிறகு "வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்புத் தொடங்கவிருக்கிறது.
"விடுதலை 2' படத்தின் பணிகளோடு,"வாடிவாசல்' படத்தின் திரைக்கதைப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். படத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்துகொண்டிருக்கிறது படக்குழு. இதற்காக அமெரிக்காவில் "ஜூராஸிக் வேர்ல்டு' படத்தில் பணியாற்றிய கலைஞர்களைத் தொடர்புகொண்டு பேசி வருகிறார் தாணு.
வியக்க வைக்கிறது நாயகன் சூரியின் கதைத் தேர்வுகள். "விடுதலை' படத்தின் மூலம் கதை நாயகனாக அவதாரம் எடுத்த சூரி, அடுத்து வெளியான "கருடன்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து "கொட்டுக்காளி' படமும் குறிப்பிடத்தகுந்த விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதை அடுத்து சூரியை இயக்கப் போவது யார் தெரியுமா? விமலை வைத்து விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் "விலங்கு' வெப்சீரிûஸ இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ்தான் அடுத்து சூரியை இயக்குகிறார்.
70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை "திருசிற்றம்பலம்' படத்திற்க்காக நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையும் தாண்டி இந்த படத்தில் வரும் "மேகம் கருக்காதா?' பாடலுக்காக சிறந்த நடன இயக்குநர்களுக்கான விருது ஜானி மாஸ்டருக்கும் சதீஸ் மாஸ்டருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு இப்படியான இரண்டு அங்கீகாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து தனுஷ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.
பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த ஒலி வடிவமைப்பு என நான்கு தேசிய விருதுகளை தட்டித் தூக்கியிருக்கிறது. இதில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ரஹ்மானுக்கு 7}ஆவது தேசிய விருது. இந்திய இசையமைப்பாளர்களில் அதிகமுறை தேசிய விருதைப் பெற்றவர்கள் பட்டியலில் இவர் ஏற்கெனவே முன்னிலை வகித்திருந்தார்.