முகப்பு
ஜேசன் சஞ்சய்
தினமணி கதிர்

திரைக் கதிர்

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனமே சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

தினமணி கதிர்

திரைக் கதிர்

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனமே சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

Updated On : 7 டிசம்பர், 2024 at 6:30 PM
ஜேசன் சஞ்சய்
பகிர்:

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனமே சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அதன் பிறகு படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் உட்பட படத்தின் எந்தத் தகவலையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. படத்தின் முதற்கட்டப் பணிகள் நடந்து வருவதாகவே தகவல் கிடைத்தது. தற்போது படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவலை வெளியிட்டிருக்கின்றனர். இவரும் நடிப்பு பக்கமே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டைரக்ஷன் பக்கம் களமிறங்கி பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன்

விஜய்சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் சமீபத்திய மைல் கல் வெற்றியாக அமைந்தது மகாராஜா. இப்போது இந்தப் படம் சீனாவில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தன் எக்ஸ் பக்கத்தில், "மகாராஜா சீனாவில் பிரமாண்டமாக வெளியானது.

இந்தச் சாதனையைப் பற்றி பெருமைப்படுவதோடு, அங்கும் இது மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன். விஜய் சேதுபதிக்கும், இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கும் வாழ்த்துகள். மேலும் எல்லைத் தாண்டிய ஒரு படத்தை உருவாக்கியதற்காக சுதன் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அஜித்

விடாமுயற்சியின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் கதைக்களம் அஜர்பைஜான் நாட்டில் நகர்வதாக டீசரில் காண்பிக்கப்பட்டியிருக்கிறது. சேசிங், சண்டைக் காட்சிகள் மூலம் "விடாமுயற்சி' ஒரு ஆக்ஷன் திரைப்படம் என்பதைக் காட்டும் இந்த டீசர், அஜித் உட்பட யாருடைய வசனமும் இன்றி முடிகிறது. அதேசமயம், டீசரின் இறுதியில் "எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' என்ற வசனம் எழுத்தாக மட்டும் காண்பிக்கப்படும்போது, வரும் பின்னணி இசை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், விடாமுயற்சியின் அந்த தீம் மியூசிக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தனுஷ் விவகாரத்தில் நயன்தாரா பக்கம் ஏன் நின்றேன் என்பது பார்வதி திருவோத்து பதிலளித்திருக்கிறார். அதில், நயன்தாரா அனுபவித்த வருத்தங்களைக் குறிப்பிட்டு மூன்று பக்கக் கடிதத்தை எழுதியிருக்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அவர் உண்மையான பிரச்னையை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் அந்த விஷயத்தில் ஒரு மதிப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஒரு சமயத்தில் மற்றவர்களில் நம்மை உணர்வோம். அதனால்தான் அவர் செய்தது சரியானது எனப் பகிர்ந்தேன்.' எனக் கூறியிருக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →