மருத்துவர் ராமதாஸ் 
தினமணி கதிர்

உலக அளவில் சாதிக்கும் தமிழர்...

தமிழ்நாட்டின் மாயவரம் அருகேயுள்ள நல்லாடை என்ற ஊரில் பிறந்து, இன்று நாற்பத்து ஐந்து பன்னாட்டு நிறுவனங்களின் உரிமையாளராக இருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

DIN

-முத்துரத்தினம்

தமிழ்நாட்டின் மாயவரம் அருகேயுள்ள நல்லாடை என்ற ஊரில் பிறந்து, இன்று நாற்பத்து ஐந்து பன்னாட்டு நிறுவனங்களின் உரிமையாளராக இருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். சுமார் இரண்டாயிரம் பேர் இவரது நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்களில் அமெரிக்கர்களும், இங்கிலாந்து நாட்டவர்களும் அடங்குவர்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து மருத்துவரான இவர், 1983-இல் சேஷல்ஸ் என்ற தீவுக்கு மருத்துவத் தொழில் புரியச் சென்றார். அப்போது அங்கு அதிபராக இருந்த ஆல்பர்ட் ரெனே என்பவர், ராமதாஸை அந்த நாட்டு ராணுவத்தில் பணிபுரிய அனுப்பினார். ராமதாஸின் அயராத உழைப்பைப் பார்த்த அதிபர், ராணுவத் தலைமை மருத்துவராகப் பதவி உயர்த்தினார்.

அதிலும் தனது திறமையை ராமதாஸ் வெளிப்படுத்த, அதிபர் ஆட்சி செய்யும் கட்சியான 'பீப்புள் பார்ட்டி' யின் பொருளாளராக்கப்பட்டார். எழுத்து ஆர்வத்தின் காரணமாக ஆங்கிலப் பத்திரிகையை ஒன்றையும் நடத்தினார். இவரது மனைவி ஜுலியா. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் செல்லாத நாடுகளோ, சந்திக்காத தலைவர்களோ இல்லை. இவருக்குப் பிடித்த தலைவர்கள் காமராஜர், சிங்கப்பூரின் 'லீ குயன் யென்' .

'உலக அளவில் சாதிக்கும் புலம்பெயர்ந்த தலைவர்கள்'என்ற நூலில், டாக்டர் ராமதாஸூக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.

'நான் ஏழையாகப் பிறந்தது என் தவறு கிடையாது. ஆனால் நான் இறக்கும்போதும் ஏழையாகவே செத்தால் அது என் தப்பு' என்ற வாசகம்தான் டாக்டர் ராமதாஸின் தாரக மந்திரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT