டான்யூப் நதி 
தினமணி கதிர்

உலகம்... அழகு கலைகளின் சொர்க்கம்..!

உலகின் பல நாடுகளில் எண்ணற்ற சிறப்பு அம்சங்களும், தனித்துவமும் உள்ளன. அங்குள்ள சுவாரசியங்கள் கண்களுக்கு விருந்தாகவும், கேட்பதற்கு வியக்கவைக்கும் வகையிலும் இருக்கும்.

ராஜிராதா

உலகின் பல நாடுகளில் எண்ணற்ற சிறப்பு அம்சங்களும், தனித்துவமும் உள்ளன. அங்குள்ள சுவாரசியங்கள் கண்களுக்கு விருந்தாகவும், கேட்பதற்கு வியக்கவைக்கும் வகையிலும் இருக்கும்.

சிலவற்றை அறிவோம்:

பத்து நாடுகள் வழியாகச் செல்லும் நதி:

ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, குரோஷியா, ருமேனியா, பல்கேரியா, மால்டோவா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளின் வழியாகச் செல்கிறது ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நதியான 'டான்யூப்'. ஜெர்மனியின் ப்ரெக்கில் தொடங்கி, மத்திய, தென் கிழக்கு ஐரோப்பா வழியாக ஓடி கருங்கடலில் இணைகிறது.

ஆழம் அதிகபட்சம் 90 மீட்டர். 2,850 கி.மீ, ஒடும் இந்த நதியில் 2,415 கி.மீ. தொலைவுக்குக் கப்பல்களில் பயணிக்கலாம். சொகுசு படகுகளும் உண்டு. நதி சில இடங்களில் நீலம், மஞ்சள், ரத்தச் சிவப்பு என இடத்துக்கு இடம் மாறுபடுகிறது.

இந்த நதி செல்லும் வழியில் வியன்னா, புடாபெஸ்ட், பிராட்ஸ்லாவா, பெல்கிரேட் ஆகிய நாலு தேசியத் தலைநகரங்கள் வழியாகச் செல்கின்றன.கோடைகாலத்தில் அவற்றை நதியின்அடியில் காண இயலும்.

புடாபெஸ்ட் நகரை 'டான்யூப்பின் ராணி' என அழைக்கின்றனர்.

கன்னித்தீவுகள்

ஆயிரம் மலைகளின் நாடு:

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டாவை 'ஆயிரம் மலைகளின் நாடு' என்கின்றனர். பசுமையான மலைகள், வளமான பள்ளத்தாக்குகள், இயற்கையான எழில் சூழ்ந்த ஏற்ற இறக்க மலைகளுடன் உள்ள நாடு. கரடுமுரடான அழகான மலைகளின் சங்கிலி. இந்த நாட்டின் சிறப்பான மலைகொரில்லா குரங்குகளை விருந்தாமலைப் பகுதியில் காணலாம். வறுமை பல ஊர்களில் தாண்டவமாடுகிறது. பட்வா என்ற ஊரில் 40 % பேரின் சம்பாத்தியமே இறந்து உண்பதுதான்.

மிக அழகான பூ 'தி கிரேட் விஸ்டேரியா':

ஜப்பானின் அஷிககா நகரில் உள்ள அஷிகாகா மலர் பூங்காவில் வாழும் மரம்தான் 'தி கிரேட் விஸ்டேரியா'. ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கி, அதன் அடியில் நடப்பவர்களைக் கிரங்க வைக்கும். இதை 'தாவரவியல்அதிசயம்' எனக் கூறுவர்.

இந்தப் பூங்காவில் சுமார் 150 வயது ஜப்பானிஷ் விஸ்டிராவை கண்டுகளிப்பதுடன், அதன் பூக்கள் செழிப்பின் அடியில் பவனி வரலாம். சுமார் 20 மீட்டர் வளர்ந்து, பின்னர் 10 மீட்டர் பக்கவாட்டில் நீளும். பூக்களில் வெள்ளை, இளம்சிவப்பு, ஊதா.. என வகைகள் உண்டு. மலர்கள் மணம்கொண்டவை. இனிமை, கஸ்தூரி வாசனை கூடுதல் சிறப்பு.

ஒவ்வொரு வசந்த காலத்திலும், ஊதா நிற வண்ணப் பூக்களால் நிறைத்து அசத்துகிறது. இதன் இயற்கையின் கலைத்திறனை மக்கள் ரசிக்கின்றனர். இதனை ஜப்பானியர்கள் பரோபகாரத்தின் சின்னத்துக்காகவே கருதுகின்றனர்.

ஜப்பானின் புராணக் கதையின்படி 'இது மனிதர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறது. அரக்கர்களுக்கோ கெட்டதை அளிக்கிறது' எனப்படுகிறது.

சீனா, கொரியா, வியத்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் இதனை கண்டுகளிக்கலாம்.

கன்னித்தீவுகள்

கன்னீத் தீவுகள் கிரிஸ்டோபர் கொலம்பஸால் 1493-இல் கண்டுபிடிக்கப்பட்டவை. மொத்தம் 284 ஹெக்டரில் பரவியுள்ள இந்தத் தீவுகளைக் கண்டுகளிக்க அழகோஅழகு. சுற்றி வந்தால் டச்சு நாட்டு கலை சார்ந்த கட்டடங்களையும் காணலாம். செயின்ட் தேம்ஸ், செயின்ட்ஜான், செயின்ட்க்ருக்ஸ் ஆகியன பெரியவை. இவைதவிர 50 சிறிய தீவுகளும் இவற்றில் அடக்கம்.

அமெரிக்க கன்னித்தீவுகள் டென்மார்க்கிடமிருந்து 25 லட்சம் டாலருக்கு வாங்கப்பட்டன. இன்று இவைஅமெரிக்க அரசுக்கு உட்பட்ட பகுதியாகும். அட்லாண்டிக் பெருங்கடலில் புவேர்ட்டோரிக்னோவுக்கு கிழக்கே 64 கி.மீ. தொலைவில் இந்தத் தீவுகள்உள்ளன. தீவுகள் சிலவற்றை அமெரிக்காவும், சிலவற்றை பிரிட்டனும் வைத்துள்ளன.

இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோனோர் கருப்பினர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கரும்புகள் பயிரிட அடிமையாக அழைத்து வரப்பட்டவர்கள். இங்கு 'சர்க்கரை பூ' என ஒரு பறவை உள்ளது. அதுஅங்கு வளரும் வாழைப்பூவில் உள்ள தேனைக் குடிப்பதால் இந்தப் பெயராம்.

அமெரிக்காவின் சாலைகளில் இடதுபுறத்தில் மக்கள் வாகனங்கள் ஓட்டும் ஒரே இடம் இங்குதான். ஸ்கியூ பா டைவிங், படகு சவாரி, கயா கிங் ஆகியவற்றுக்கு மிக பிரபலமான

இடம். இங்குள்ள பல கடற்கரைகள் கண்ணைக் கவரும் வெள்ளை மணலுக்கும் பளிங்கு மாதிரியான நீருக்கும் பிரபலம். இங்குள்ள கடற்கரை புதுமண ஜோடியினரை கவர்ந்திழுக்கும்.

இங்குள்ள பவளப்பாறை உலகம் கடல் பார்க் பார்க்க அட்டகாசமாய் இருக்கும். செயின்ட் ஜானில் உள்ள தேசிய பூங்காவில் 40 சதவீதம் கடலுக்கடியில் வாழும் அபூர்வ உயிரினங்களாகும்.

இங்கு ஸ்டிரிங்கரே, யெல்லோ ஸ்ளாப்பர், கிங் பிஷர் உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட வகையான மீன்களையும் காணலாம். பிரபல எழுத்தாளர் ராபர்ட் லூயி ஸ்ஸ்டிவன்சன் எழுதியபடி, 'ரெசர்ஐலாந்து' கதையில் வரும் தீவு இங்குள்ளது.

மயோங்-அமானுஷ்ய உலகம்:

இந்தியாவில், அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மயோங் என் ஊர் மந்திரம், சூனியத்துக்கு பிரபலம்.

'மனிதர்கள் காற்றில் மறைந்து போவர்; மக்கள் விலங்குகளாய் மாற்றப்படுவர்; மிருகங்கள் மாயமாகக் கட்டுப்படுத்தப்படும்..' போன்ற பல தந்திர காட்சிகள் மாயோங்குடன் தொடர்புடையவை. நரபலி இங்கு சகஜமாக நடந்துள்ளது. தொல்பொருள் ஆய்வில் மந்திரங்கள், நரபலி சார்ந்த பல ஆயுதங்கள் கிடைத்துள்ளன.

வன விலங்குகள், தொல்பொருள் யாத்திரை சுற்றுலா, சாகச சுற்றுலா... என பலவற்றுக்குப் பிரபலம். இங்கு மத்திய அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

ஊரின் அருகிலேயே அருகில் வன விலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை அதிகம் காண முடியும். இதனால் ஊருக்கு மாயா நகரம், சூனிய பூமி என்ற பெயர்கள் இன்று வரை நிலைத்துள்ளன. இங்கு பயந்தபடியே நடமாட வேண்டும்.

ஹெளகாத்தியிலிருந்து 40 கி.மீ. உள்ளது மாயோங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT