முகப்பு
தினமணி கதிர்

விமான உணவகம்

வதோதராவில் ஏர்பஸ் 320 விமானத்தில் உருவாக்கப்பட்ட 'விமான உணவகம்'

Updated On : 7 ஜூலை, 2024 at 6:51 PM
பகிர்:
Updated On : 7 ஜூலை, 2024 at 5:12 PM

உணவு விடுதிகளின் சூழல் பயனாளர்களைக் கவரும் விதத்தில் அமைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக மாறிவிட்டது. சுழலும் உணவகம், மிதக்கும் உணவகம், ரயில் பெட்டி உணவகம் என்றெல்லாம் உணவகங்கள் அவதாரம் எடுக்கின்றன. இதன்படி, குஜராத் மாநிலத்தின் வதோதரா நகரில் "விமான உணவகம்' செயல்பட்டுவருகிறது.

பயன்பாட்டில் இல்லாத ஏர்பஸ் 320 விமானத்தை சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வாங்கி, "ஹை ஃபிளை ரெஸ்ட்ரோ' என்ற பெயரிடப்பட்டு "விமான உணவகம்' உருவாக்கப்பட்டுள்ளது.

உலகில் விமானப் பின்னணி கொண்ட உணவகங்களில் வதோதராவில் செயல்படும் இந்த உணவகம் ஒன்பதாவது உணவகமாகும். இங்கு ஒரே நேரத்தில் 102 பேர் அமர்ந்து உணவு அருந்தலாம்.

Advertisement

இங்கு பணியாற்றும் பணியாளர்களோ விமானப் பணிப்பெண்கள் போன்ற சீருடைகளை அணிகின்றனர். எல்லா வகை உணவுவகைகளும் கிடைக்கும். விமானத்தில் பறக்காதவர்கள் விமானத்தின் உள்புறம் எப்படி இருக்கும் என்பதை ரசித்துகொண்டே உணவு உண்ணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.