திரைக்கதிர்
தயாரிப்பாளர் முரளி ராமசாமியின் தயாரிப்பு நிறுவனமான "தேனாண்டாள் பிலிம்ஸ்' நீண்ட இடைவெளிக்குப் பிறகு படங்களைத் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறது.
தயாரிப்பாளர் முரளி ராமசாமியின் தயாரிப்பு நிறுவனமான "தேனாண்டாள் பிலிம்ஸ்' நீண்ட இடைவெளிக்குப் பிறகு படங்களைத் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறது. "மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தை இப்போது தயாரிக்கவிருக்கிறது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் கடைசியாக விஜய் நடித்திருந்த "மெர்சல்' திரைப்படத்தைத் தயாரித்திருந்தது. அதுதான் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் 100}ஆவது திரைப்படம். இந்தப் புதிய படத்தில் யூடியூப் தளத்தின் மூலம் பரிச்சயமான "ஜம்ப் கட்ஸ்' ஹரி பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கிறார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
நடிகர் நெப்போலியன் தனது குடும்பத்துடன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவரின் மகனுக்குச் சமீபத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. இந்த நிச்சயதார்த்தம் விடியோ கால் மூலமாக நடைபெற்றிருக்கிறது. நெப்போலியனின் மகனான தனுஷுக்கு நான்கு வயது இருக்கும்போது தசைநார் தொய்வு ஏற்பட்டது. இவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த நிச்சயதார்த்தம் விடியோ காலில் நடைபெற்றதாகக் கூறுகிறார்கள்.
Advertisement
------------------------------------------------------------------------------------------------------------------------------
தனுஷ் தன்னுடைய 50-ஆவது திரைப்படமான "ராயன்' படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் இம்மாதம் 26}ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு "ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதற்கு முன் தனுஷ் நடித்திருந்த "வடசென்னை' திரைப்படத்திற்கும் "ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.
பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "கல்கி 2898' திரைப்படம், வெளியாகி மூன்றாவது வாரத்திலும், ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூலில் 1000 கோடி ரூபாய் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.பாகுபலி 2-க்குப் பிறகு பிரபாஸ், தற்போது ரூ. 1000 கோடி கிளப்பில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். இப்படம் தெலுங்கு மாநிலங்களில் இன்னும் பெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ஹிந்தி திரையுலகிலும் மற்றும் பிற மொழிகளிலும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
இயக்குநர் வெற்றிமாறனின் "விடுதலை பார்ட் 1' திரையரங்கில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றதில் இருந்தே, இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. "விடுதலை' படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் ஆர்வமாக உள்ளன.
இந்த நேரத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ், தெலுங்கில் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வெளியிடப்பட்டுள்ளார்.
"விடுதலை 1' , "கருடன்' படங்களின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பின்னர் நடிகர் சூரியின் கேரியர் கிராஃப் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. விஜய் சேதுபதியின் "மகாராஜா' திரைப்படமும் வெற்றியடைந்திருக்கிறது. இதுபோன்ற பல பாசிட்டிவான விஷயங்களோடு "விடுதலை2' பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.