சிரி... சிரி...
'கல்யாணம் பண்ணிகிட்டா பணம் கொட்டுமுன்னு ஜோசியர் சொன்னாரே.. பலிச்சிடுச்சா...?'
'எங்கே மனைவிதான் கொட்டுறா.. செல்வம் கொட்டலை.. கடன்தான் ஏறுது...'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
Advertisement
'இனிமேல் கடனே வாங்கக் கூடாதுன்னு முடிவு எடுத்துட்டேன்டா...'
'வெரிகுட் எதனால்...'
'கடன் வாங்கதானே மாட்டே.. கடன் கொடுக்கலாம்ல...'
'ஒரு வழியா பசங்களுக்கு அட்மிஷன் கிடைச்சிடுச்சி...'
'பரவாயில்லையே.. கேட்ட குரூப் கொடுத்தாங்களா?'
'ம்.. முதலில் டொனேஷன் இல்லைன்னாங்க.. அப்புறம் பைனான்ஸில் கடன் வாங்கின மாதிரி கையெழுத்து வாங்கிட்டு, மாசம்தோறும் தவணையில கட்ட சொல்லிட்டாங்க..'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
'உங்களுக்கு தனி நபர் கடன் வேணுமா? வீட்டுக் கடன் வேணுமா...?'
'வாராக்கடன்னு சொல்றாங்களே... அதை கொடுங்க சார்...'
-அ.செந்தில்குமார், சூலூர்.
'பிச்சை இல்லப்பா...'
'தம்பி.. வாங்கின கடனுக்கு வட்டி கொடுப்பா...'
'இனிமே கடனே வாங்காமா பிச்சை எடுக்கலாமுன்னு தோணுது..'
'மச்சான்... இப்போதான் வாழ்க்கையில் உனக்கு முன்னேற ஆசை வந்திருக்கு...'
-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
'காய்கறியை கடன் வாங்க வர்ற எதிர்வீட்டுக்காரி கையில் தராசுடன் வர்றா...?'
'வாங்கறதை எடை போட்டு வாங்க வர்றாளே...'
'கடன் இல்லாமல் வாழ ஒரு வழி சொல்லுங்க...?'
'கடன் வாங்காமல் இரு.. அதுதான் ஒரே வழி...'
-பர்வதவர்த்தினி, பம்மல்.
'கடன் தள்ளுபடி ஆனதை தெரிஞ்சுக்கவா பேங்கில் இவ்ளோ கூட்டம்...'
'இல்லை அடுத்து எப்போ கடன் கொடுப்பாங்கன்னுதான்...'
'சலூன் வைக்க கடன் இல்லையாம்.. கிராப் லோன் வேணும்னா தர்றேன்னு சொல்றாங்க பேங்கில்...'
'கிராப் லோன்தான் தேவைன்னு நீ சொல்லலையா...?
'சம்பள நாளன்று எனக்கு ரொம்ப டென்ஷன்தான்...'
'ஏன் அப்படி...'
'கடன்காரங்களை எப்படி சமாளிக்கிறதுன்னுதான்...'
'வீடு தேடி வந்திட்டிங்க மேனேஜர் சார்.. லோனை ரெண்டு நாளில் கட்டிடறேன்...'
'லோன் கட்டுறது இருக்கட்டும். நாயை பிடிச்சி முதலில் கட்டுங்க...'
'உனக்கு லோன் இல்லைன்னு பேங்க் மேனேஜர் சொல்லிட்டாரே... ஏன்...'
'எனக்கு உருமாறும் வித்தை தெரியுமுன்னு யாரோ சொல்லிட்டாங்க போல...'
-வி.ரேவதி, தஞ்சாவூர்.