முகப்பு
தினமணி கதிர்

திரைக் கதிர்

சிவகார்த்திகேயன் தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது

தினமணி கதிர்

திரைக் கதிர்

சிவகார்த்திகேயன் தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது

Updated On : 8 ஜூன், 2024 at 6:30 PM
பகிர்:

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருக்கும், ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு ஆராதனா என்ற பெண் குழந்தையும், குகன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்திருப்பதை சிவகார்த்திகேயனே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். ""ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம்'' என்று பதிவிட்டிருக்கிறார் சிவா.

------------------------------------------------------------

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த போது சந்தித்த கசப்பான அனுபவத்தை மனிஷா கொய்ராலா பகிர்ந்திருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த போது சந்தித்த கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த மனிஷா கொய்ராலா ""இந்தப் பயணம் எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அனைவரும் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனமாக இருங்கள், எனக்கு நிறைய உறவினர்கள், பெரிய குடும்பம் இருக்கிறது. அனைவருமே வசதியானவர்கள்தான், ஆனால் நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது, என்னுடன் யாரும் இல்லை, அனைவரும் விலகி விட்டார்கள். என் நண்பர்கள் கூட அப்போது என்னுடன் இல்லை. ஆனால், அப்போது என்னுடன் இருந்தது என் பெற்றோர், என் சகோதரர், சகோதரிகள்தான்.இப்போதும் நான் மன அழுத்தத்தோடுதான் இருக்கிறேன், அதே வலியோடுதான் என் வேலைகளை செய்கிறேன்'' என்று வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.

------------------------------------------------------------

மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது குறித்த கேள்விக்கு மீண்டும் பதிலளித்துள்ளார் நடிகர் சத்யராஜ். கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், ""பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க என்னிடம் யாரும் கேட்கவில்லை. பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்றால் என் நண்பர் மணிவண்ணன் போன்ற ஒருவர் இயக்கினால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் மாதிரியான இயக்குநர்கள் மோடியின் பயோபிக் எடுத்தால் நன்றாக இருக்கும். அவர்கள்தான் இருப்பதை அப்படியே எடுப்பார்கள்'' என சத்யராஜ் கூறியிருக்கிறார்.

------------------------------------------------------------

சினிமாவில் அரை சதத்தைக் கடந்து சிக்ஸர் அடித்து வருகிறார் தனுஷ். அவரது 50-ஆவது படமான "ராயன்' ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதால், ரிலீஸ் வேலைகள் பரபரக்கின்றன. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரகாúஷ்ராஜ், செல்வராகவன், ஜெயராம், துஷாரா, அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி எனப் பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் "அடங்காத அசுரன்' என்ற சிங்கிள் லிரிக் விடியோவும், அடுத்த சிங்கிளான "வாட்டர் பாக்கெட்' பாடலும் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் "ராயன்' ரிலீஸை அடுத்த மாதம் தள்ளி வைக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன. எனவே ஜூலை முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீடும் நடைபெறலாம் என்கின்றனர்.அனேகமாக ஜூலை மூன்றாவது வாரத்தில் படத்தின் ரிலீஸ் இருக்கலாம் என்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →