பராசக்தி படத்தில் நடித்தது வாழ்நாள் பெருமை அளிப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பராசக்தி போன்ற கதையம்சமுள்ள படத்தில் நடித்தால் காலத்துக்கும் என் பெயர் பேசப்படும் என்று நினைத்து நடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படம், கடந்த 10-ஆம் தேதி வெளியானது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ரசிகர்களுக்கு நன்றி கூறும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:
''பராசக்தி படத்தைப் பார்த்து விட்டு குட்டிப் பையன் ஒருவன் தீ பரவட்டும், தமிழ் வாழ்க என்று விடியோவில் பேசியுள்ளார். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பு மக்களிடமும் பராசக்தி படம் சென்று சேர்ந்துள்ளது. இயக்குநர் சுதா கதை கூறும்போதே, நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரம் என்பதால் பராசக்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
தமிழ் உணர்வை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வாய்ப்பாக இதனைக் கருதினேன். இப்படத்தில் நடித்தால் காலத்துக்கும் பேசப்படுவேன் என நினைத்தேன். ஒரு நடினகான பாராட்டப்படுவேன் என நினைத்தேன். அவை அனைத்தும் நடந்துள்ளன'' என நெகிழ்ச்சியுடன் பேசினார்.
தணிக்கை குழுவின் ஆட்சேபனைக்கு உரிய காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டு, யு/ஏ சான்றிதழுடன் வெளியான பராசக்தி, 2 நாள்களில் உலகளவில் ரூ. 51 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.