ரவியால்தான் பராசக்தி ஓடும்: கெனிஷா
ரவி மோகனின் பராசக்தி நடிப்பு குறித்து கெனிஷா...
பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகன் நடித்தது குறித்து கெனிஷா பேசியுள்ளார்.
சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இதில், வில்லனாக நடிகர் ரவி மோகனும் முக்கிய கதாபாத்திரங்களில் அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், பாடகி கெனிஷா, “ஹீரோவாக நடித்தாலும் வில்லனாக நடித்தாலும் ரவி மோகனால்தான் பராசக்தி திரைப்படம் ஓடும். வேறு யாரும் என் கண்களுக்குத் தெரியவில்லை.
அவர்தான் இப்படத்தில் நம்பர்.1... இப்படத்திற்காக 6 மாதங்கள் கடுமையாக உழைத்தார். முதல்பாகத்தில் பெரிதாக இல்லையென்றாலும் இரண்டாம் பாகத்தில் அவரைத்தாண்டி எதுவும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
singer kenisha about actor ravi mohan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.