தினமணி கதிர்

பாலிவுட் ஸ்டூடியோ!

10 வருடங்களை நிறைவு செய்த கியாரா அத்வானி: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!

டெல்டா அசோக்

10 வருடங்களை நிறைவு செய்த கியாரா அத்வானி!

எம்.எஸ்.தோனியின் பயோபிக்கில் சாக்ஷியாக நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் கியாரா அத்வானி. 'ஷேர்ஷா' படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்த அவர், அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'கேம் சேஞ்சர்' படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கியாரா அத்வானி சினிமாவில் அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவு பெற்றதை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். சினிமாவில் 10 வருடத்தை நிறைவு செய்தது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார் நடிகை கியாரா அத்வானி.

அவர் வெளியிட்டிருந்த பதிவில், '10 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் நேற்றுதான் சினிமாவுக்குள் வந்ததுபோல் இருக்கிறது. குடும்பத்துக்காக, வாழத் துடிக்கும் பெண்ணாகத்தான் இன்னும் இருக்கிறேன். நீங்களும் என் குடும்பமாகிவிட்டதால் (ரசிகர்கள்) என் குடும்பம் இப்போது பெரிதாகி விட்டது. எனது இணை நடிகர்கள், வழிகாட்டிகள், ஆசிரியர்கள், விமர்சகர்கள், பார்வையாளர்கள், எனது குடும்பத்தினர், எனது ரசிகர்கள் மற்றும் இந்தக் கனவை நனவாக்கிய உங்கள் ஒவ்வொருவரின் அன்புக்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றி' என்று பதிவிட்டிருக்கிறார்.

தற்போது அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சினிமாவில் 10 வருடத்தை நிறைவு செய்த கியாரா அத்வானிக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இன்று சோனாக்ஷி திருமணம் !

பாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. 2010 - ஆம் ஆண்டு 'தபாங்' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படத்தில் அவருக்கு ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

தமிழில் 2014 - ஆம் ஆண்டு வெளியான 'லிங்கா' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு அவர் நடித்த 'ஆக்சன் ஜாக்சன்', 'தேவர்', 'அகிரா', 'ஃபோர்ஸ் 2', 'நூர்', 'கந்தானி, 'ஷஃபாகானா' என அடுத்தடுத்து வெளியான 11 படங்களும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'ஹீராமண்டி தி டைமண்ட் பஜார்' வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது 'நிகிதா ராய் அண்ட் தி புக் ஆஃப் டார்க்னஸ்' மற்றும் 'கக்குடா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சோனாக்ஷி சின்ஹா நடிகர் சாஹீர் இக்பால் என்பவரை நீண்ட நாள்களாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் ஜூன் 23-இல் திருமணம் நடைபெறவுள்ளது. அவர்களது நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களைத் தவிர, ஹீராமண்டி குழுவினருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. திருமணக் கொண்டாட்டங்கள் மும்பையில் உள்ள பாஸ்டியனில் நடைபெற உள்ளது.

கசப்பான அனுபவம் பகிர்ந்த உர்ஃபி ஜாவேத்!

ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்த உர்ஃபி ஜாவேத் 2021-ஆம் ஆண்டு ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் 1-இல் கலந்துகொண்டு பிரபலமானவர். பிக் பாஸிலிருந்து ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார். இது பலரது விமர்சனங்களுக்கும், ட்ரோல்களுக்கும் ஆளாகி வருகிறார்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தது குறித்து பேசிய அவர், 'நீங்கள் ஒரு பிரபலமான நடிகையாக இல்லை என்றால் தொலைக்காட்சித் தொடர்களில் பணிபுரிவது மிகவும் கடினம். உங்களை விலங்குகளைப் போலதான் நடத்துவார்கள். சிலர் சரியாக சம்பளம் தர மாட்டார்கள். சிலர் ஒப்பந்தம் செய்த சம்பளத்தைத் தராமல் குறைந்த சம்பளத்தைத் தருவார்கள். தொலைக்காட்சிகளில் பணிபுரியும்போது மிகவும் கசப்பான அனுபவங்களையே பெற்றிருக்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார். மேலும், 'பிக் பாஸ் செல்வேன் என்று நினைக்கவில்லை. அந்த வாய்ப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ஏனென்றால் அதன் பிறகுதான் நான் பிரபலமடைந்தேன். ஆனால் தொலைக்காட்சி தொடர் மட்டுமின்றி பிக் பாஸ் மாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இனி பங்கேற்க மாட்டேன்' என்று கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

SCROLL FOR NEXT