தினமணி கதிர்

திரைக்கதிர்

சூர்யாவின் 45-ஆவது திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது.

Vishwanathan

சூர்யாவின் 45-ஆவது திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. டைரக்ஷன் மட்டுமல்ல; அவர் நடிக்கும் திரைப்படத்தின் வேலைகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இவர் நடித்து வரும் "சொர்கவாசல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்டிருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார். இவர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த மாதம் 14-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது "கங்குவா'. இத்திரைப்படத்தின் வரலாற்று காட்சிகளைதான் பாடல்களிலும், ட்ரைலரிலும், டீசரிலும் பார்த்திருந்தோம்.

நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகள் குறித்தான எந்தவொரு அப்டேட்டையும் கொடுக்காமல் இருந்தனர். தற்போது அதை பாடல் மூலம் அறிமுகம் செய்கிறது படக்குழு. ஏற்கெனவே, "ஃபயர் சாங்' என்ற ஒரு பாடலை வெளியிட்டிருந்தார்கள். தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாடலான "வாமோஸ் பிரிங்கர் பேப்' வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சாண்டல்வுட்டில் வெளியான "மார்டின்' என்ற திரைப்படத்தின் கதையை எழுதியது நம் ஆக்ஷன் கிங் அர்ஜூன்தான். "சேவகன்' திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரமெடுத்தவர் இதுவரை மொத்தமாக 12 படங்களை இயக்கியிருக்கிறார்.

தன்னுடைய அடுத்த டைரக்ஷனுக்கான வேலைகளையும் கையில் எடுத்து விட்டார் ஆக்ஷன் கிங். "சீதா பயணம்' என்ற படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் எடுக்கவிருக்கிறார். அர்ஜூன் தற்போது அஜித்துடன் "விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

தனியார் செய்தி நிறுவனத்தின் ஒரு புரோமோஷன் நிகழ்வில் "நீங்களும் ஜோதிகாவும் எப்போது சேர்ந்து நடிக்கப்போகிறீர்கள்' என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யா, " ஒவ்வொரு திரைப்படமும் ஆர்கானிக்காக நிகழ வேண்டும். திரைக்கதையாசிரியர்களும், இயக்குநர்களும்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.

நாங்கள் இருவரும் "2டி என்டர்டெயின்மென்ட்' என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறோம் என்பதற்காக ஒரு இயக்குநரிடம் இத்திரைப்படத்தின் ரீமேக்கில் எங்கள் இருவரை நடிக்க வைக்கிறீர்களா? என நாங்கள் கேட்கமாட்டோம். அது தானாகவே நிகழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் பான்-இந்தியா திரைப்படமான "தி ராஜா சாப்' படத்தின் மீதான உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தயாரிப்பாளர்கள் பிரபாஸின் பிறந்தநாளில், அவர் இடம்பெறும் அசத்தலான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்களுக்கு விருந்தாக பகிரப்பட்ட இந்த மோஷன் போஸ்டர், தற்போது இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. முதல் முறையாக ஹாரர் காமெடி ஜானரில் பிரபாஸ் களமிறங்குகிறார். இது படத்தின் மீதான ஆவலை உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடவுளை முட்டாளாக்க முடியாது! ரவி மோகனைச் சாடும் ஆர்த்தி?

ஈரானுடன் உறவை முறித்த ஆஸ்திரேலியா! தூதர் வெளியேற உத்தரவு!

காதலே காதலே... ஐஸ்வர்யா லட்சுமி!

நொய்டா வரதட்சிணை கொலையில் திடீர் திருப்பம்: நிக்கியின் கணவர் மீது ஏற்கனவே வழக்கு!

4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!

SCROLL FOR NEXT