அமரன் 
தினமணி கதிர்

ராணுவப் படங்களைத் தேடும் ரசிகர்கள்!

மறைந்த இந்திய ராணுவ அலுவலர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை 'அமரன்' திரைப்படமாக தீபாவளியன்று திரைக்கு வந்தது.

டெல்டா அசோக்

மறைந்த இந்திய ராணுவ அலுவலர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை 'அமரன்' திரைப்படமாக தீபாவளியன்று திரைக்கு வந்தது.

நடிகர் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவ.கார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் இந்தப் படம், வெளியான நாள்முதல் வசூல் ரீதியாக மட்டுமல்லாது, விமர்சன ரீதியாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

திரைப் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.

மிடுக்கான ராணுவ உடையுடன் உடல் எடையை அதிகப்படுத்தி, ராணுவ வீரர் கதாபாத்திரத்துக்குப் பொருந்தியிருக்கிறார் சிவ.கார்த்திகேயன். 'அமரன்' படத்தைப் போல ராணுவத்தை மையப்படுத்திய சிறந்த சில திரைப்படங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட்

'1929' எனப்படும் நாவலை மையப்படுத்தி, உருவான மூன்றாவது திரைப்படம் இது. இதே தலைப்பில் 1930லும், 1979லும் இரண்டு வெர்ஷன்கள் வெளியாகியிருக்கிறது. 2022இல் மூன்றாவது வெர்ஷன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முதல் உலகப் போரை மையப்படுத்தி போருக்கு எதிரான மெசேஜ் பேசியது இந்த திரைப்படம். இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

ஃபுல் மெட்டல் ஜாக்கெட்

இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் இயக்கத்தில் உருவாகி 1987இல் வெளியான 'ஃபுல் மெட்டல் ஜாக்கெட்' திரைப்படம் இன்றும் சிறந்த ராணுவத் திரைப்படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.

வியட்நாம் போருக்கு ராணுவ வீரர்கள் எப்படி தயாராகிறார்கள் என்பது தொடங்கி, ராணுவத்தின் பல பக்கங்களை இந்தத் திரைப்படம் பேசும். 1979இல் வெளியான 'தி ஷார்ட் டைமர்ஸ்' எனப்படும் பயோகிராபி நாவலை மையப்படுத்தி இத்திரைப்படத்தை எடுத்திருந்தார் ஸ்டான்லி குப்ரிக்.

சேவிங் ப்ரைவேட் ரயான்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் உருவாகி 1988இல் வெளியான 'சேவிங் ப்ரைவேட் ரயான்' திரைப்படம் இன்றும் சிறந்த ராணுவ திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்

படுகிறது. இத்திரைப்படத்துக்குப் பிறகு வந்த பல ராணுவ திரைப்படங்களை எடுப்பதற்கு இந்தப் படம் இன்ஸ்பயர் செய்திருக்கிறதாம். இதனை பல பேட்டிகளில் பல இயக்குநர்களும் கூறியிருக்கிறார்கள்.

ஃப்யூரி

பிராட் பிட் இயக்கத்தில் 2014இல் வெளியான 'ஃப்யூரி' திரைப்படத்தை இயக்குநர் டேவிட் அயர் இயக்கியிருந்தார். இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் அமெரிக்காவின் டேங்கரிகளில் நாஜிகளுக்கு எதிராக சண்டையிட்ட ராணுவ அதிகாரிகளை மையப்படுத்தியது இந்தப் படம். இயக்குநர் டேவிட் அயரின் குடும்பத்தினர் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து ராணுவம் சார்ந்த விஷயங்களைக் கற்றுக் கொண்டு இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர்.

ஷெர்ஷா

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2021இல் ஆண்டு வெளியான இத்திரைப்படம் கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் பயோகிராபியாக உருவாகியிருந்தது. நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா விக்ரம் பத்ராவாக களமிறங்கியிருந்தார். இத்திரைப்படம் தேசிய விருதையும் வென்றது.

உரி சர்ஜிகல் ஸ்டைர்க்

பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் நடிப்பில் 2019இல் வெளியான இத்திரைப்படம் இந்தியாவில் வெளியான சிறந்த ராணுவ திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2016இல் நிகழ்ந்த உரி தாக்குதலை மையப்படுத்தி எடுத்திருந்தார் இயக்குநர் ஆதித்ய தார். மக்களின் வரவேற்போடு, தேசிய விருதும் கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழில் அறிமுகமாகும் கேஜிஎஃப் இசையமைப்பாளர்!

ரிதன்யா தற்கொலை வழக்கு: மூவருக்கு நிபந்தனை ஜாமீன்

தவெக மாநாட்டுக்கு விஜய் வருகை! புறப்பட்ட தொண்டர்கள்!!

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்கள் நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை: நிதிஷ்குமார்

2026-ல் ஏலியன்களை சந்திக்கப் போகும் மனிதர்கள்! அது மட்டுமா?

SCROLL FOR NEXT