ரஜினி  
தினமணி கதிர்

சினிமா ரவுண்ட் அப்!

மலையாளத்தில் மம்முட்டியை வைத்து 'டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்' எனும் திரைப்படத்தை எடுத்துகொண்டிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

டெல்டா அசோக்

மம்முட்டியுடன் கௌதம்மேனன்!

மலையாளத்தில் மம்முட்டியை வைத்து 'டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்' எனும் திரைப்படத்தை எடுத்துகொண்டிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். மம்முட்டியின் 73-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கின்றனர்.

கௌதம்மேனன் இதற்கு முன்பு 'டிரான்ஸ்' போன்ற மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் மலையாளத்துக்குச் சென்று ஒரு படத்தை இயக்குவது இதுவே முதல் முறை. அதிகாரப்பூர்வ போஸ்டரில் ஷெர்லாக் ஹோம்ஸ், 007 படத்தின் போஸ்டர்களெல்லாம் ஓட்டப்பட்டிருக்கிறது. இப்படியான விஷயங்களை வைத்து ரசிகர்கள் டீகோட் செய்து இது டிடெக்டிவ் வடிவிலான திரைப்படமாகத்தான் இருக்கும் எனப் பதிவிட்டு வருகிறார்கள்.

'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்துக்குப் பிறகு, இந்தப் படத்தில் இசையமைப்பாளர் டர்புகா சிவாவுடன் இணைந்திருக்கிறார் கௌதம் மேனன்.

விளம்பரத்தை மறுத்த மாதவன்!

உச்ச நட்சத்திரங்களான மகேஷ் பாபு, அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் பான் மசாலா விளம்பரங்களில் நடித்திருக்கின்றனர். இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பது மக்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வழிவகுக்கும் என்பதை எண்ணி, சில நடிகர்களும் மறுத்திருக்கிறார்கள்.

அண்மையில் ஒரு பான் மசாலா நிறுவனம் மாதவனை விளம்பரத்தில் நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். அவரும் மறுத்திருக்கிறார்.

தமிழுக்கு வரும் விரானிகா!

தீபா பிலிம்ஸ் சார்பில் கிருஷ்ணா கே.என் தயாரிப்பில், இயக்குநர் ஆல்வின் இயக்கத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் படம் 'ஓம் சிவம்'. இதில் கதாநாயகனாக அறிமுக நடிகர் பார்கவ் நடிக்க, கதாநாயகியாக விரானிகா நடிக்கிறார். கன்னடத்தில் மூன்று படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் விரானிகா இப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நாயகியாக அறிமுகமாகிறார்.

ரவிகாளே, ரோபோ சங்கர் முக்கிய வேடங்களில் நடிக்க, காக்ரோச் சுதி, யாஷ் ஷெட்டி, லக்ஷ்மி சித்தையா, அபூர்வஸ்ரீ, பல்ராஜ் வடி, உக்ரம் ரவி, வரதன், ரோபோ கணேஷ், ஹனுமந்தே கவுடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

'ராஜ் பகதூர்' பட புகழ் இயக்குநர் ஆல்வின் எழுதி இயக்கும் இப்படத்துக்கு விஜய் யார்ட்லி இசையமைக்கிறார். வீரேஷ் என்.டி.ஏ. ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் சந்தரையா படத்தொகுப்பு செய்கிறார். டாக்டர்.வி.நாகேந்திர பிரசாத், கவிராஜ், கவுஸ் பீர் ஆகியோர் பாடல்கள் எழுத, வி.நாகேஷ் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார். கவுரவா வெங்கடேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, மலவல்லி சாய்கிருஷ்ணா வசனம் எழுதுகிறார். தெலுங்குப் பதிப்பின் பாடல்களை ஸ்ரீராம் டபஸ்வி எழுத, தமிழ் பதிப்பின் பாடல்களை முத்தமிழ் எழுதுகிறார்.

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் காதல் ஆக்ஷன் ஜானர் திரைப்படமான இதில், தற்போதைய இளைஞர்கள் காதலுக்காக எந்த நிலைக்கும் செல்ல தயாராக இருப்பதோடு, முதிர்ச்சி இல்லாத வயதில் வரும் காதலால் அவர்கள் எத்தகைய சிக்கல்களைச் சந்திக்கிறார்கள் என்பதையும், அதே சமயம் அவர்கள் அந்தக் காதலில் வெற்றி பெற முடியாமல் போவதையும் பற்றி வித்தியாசமான கோணத்தில் பேசியிருக்கிறார்கள்.

வேட்டையன் சிங்கிள்!

ரஜினி நடித்திருக்கிற 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10-இல் திரையரங்குகளில் வெளியாகிறது. த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். முதல் பாடலான 'மனசிலாயோ' பாடல் செப்டம்பர் 9-இல் வெளியானது. இதன் முன்னோட்ட காணொளியை படக்குழுவினர் வெளியிட்டு 'இப்பாடலை பாடியிருக்கும் லெஜெண்டைக் கண்டிபிடியுங்கள்!' என பதிவிட்டிருந்தது.

இந்தப் பாடலானது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகழ்பெற்ற பாடகர் 'மலேசியா' வாசுதேவனின் சக்திவாய்ந்த குரலால் உருவாக்கப் பட்டுள்ளது, அவரது குரலுடன் யுகேந்திரன், தீப்தி சுரேஷ் ஆகியோரின் குரல்கள் 'சூப்பர்' சுப்பு, விஷ்ணு எடவன் ஆகியோரது வரிகளுக்கு உயிரூட்டியுள்ளது.

இந்த முதல் பாடல் சமூக ஊடகங்களில் வெளியாகி ஏற்கெனவே நேர்மறையான ஆதரவை பெற்றுள்ளது, ரசிகர்கள் பாடலின் உற்சாகமூட்டும் தாளத்தையும் கலைஞர்களின் கிளர்ச்சியூட்டும் பாட்டு திறனையும் பாராட்டியுள்ளனர். வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்தப் பாடல் தரவரிசையில் உயர்ந்ததோடு மட்டுமல்லாமல் பல்வேறு தளங்களில் பிரபலமடைந்து வருகிறது.

வெப் சீரிஸின் தமிழ் ரீமேக்!

ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த 'பஞ்சாயத்' வெப் சீரிஸின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கிறது 'தலைவெட்டியான் பாளையம்'. எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸில் அபிஷேக் குமார், சேத்தன் தேவதர்ஷினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் வருகிற செப்டம்பர் 20-ஆம் தேதி இந்த வெப் சீரிஸ் வெளியாகிறது.

கோலி சோடா வெப் சீரிஸ்!

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் 2014-இல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'கோலி சோடா'. இதன் வெற்றியைத் தொடர்ந்து 2018-இல் இரண்டாம் பாகம் வெளியானது. தற்போது 'கோலி சோடா' களத்தை மையப்படுத்தி 'கோலி சோடா - தி ரைசிங்' என்ற வெப் சீரிûஸ எடுத்திருக்கிறார் விஜய் மில்டன். இந்த வெப் சீரிஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. 'கோலி சோடா' படத்தின் முதல் பாகத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி, முருகேஷ் ஆகியோர் இதிலும் நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி ஷ்யாம், சேரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

SCROLL FOR NEXT