கங்கனா ரனாவத் - பாடகி ஸ்ரேயா கோஷல் 
தினமணி கதிர்

360 டிகிரி

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சி செப்டம்பர் 14-இல் கொல்கத்தாவில் நடக்கவிருந்தது.

டெல்டா அசோக்

தள்ளிப் போகும் ஸ்ரேயா கோஷல் இசை நிகழ்ச்சி !

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சி செப்டம்பர் 14-இல் கொல்கத்தாவில் நடக்கவிருந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சி தற்போது அக்டோபருக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்தும், தக்க நீதி வேண்டியும் மருத்துவர்கள் உள்பட பலரும் மேற்கு வங்க மாநிலத்தில் போராட்டங்களில் இறங்கியிருக்கிறார்கள்.

இப்படியான நேரத்தில் கொல்கத்தாவில் நிகழ்ச்சி நடத்துவது சரியாக இருக்காது என்பதை எண்ணி நிகழ்ச்சி நடக்கும் தேதியைத் தள்ளி வைத்திருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

இதுதொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரேயா கோஷல், 'இந்தக் கொடூரமான சம்பவத்தால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அந்த பயிற்சி மருத்துவர் அனுபவித்த கொடூரத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இப்படியான சம்பவம் என்னுள் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

வருகிற செப்டம்பர் 14-இல் நடக்கவிருந்த என்னுடைய நிகழ்ச்சியை அக்டோபர் மாதத்துக்கு ஆழ்ந்த சோகத்துடன் தள்ளி வைக்கிறேன். இந்த நிகழ்ச்சி பலராலும் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான் அனைவரையும் ஒற்றுமையுடன் இணைக்க வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல; உலகில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்புக்காகவும், மரியாதைக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்!'' எனப் பதிவிட்டிருக்கிறார்.

எமர்ஜென்சிக்கு யு ஏ - 3 காட்சிகள் நீக்கம்!

நடிகையும், பா.ஜ.க. எம்.பி-யுமான கங்கனா ரனாவத் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் படம் "எமர்ஜென்சி'. இந்தப் படம் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத்தே நடித்திருக்கிறார்.

ஆகஸ்ட் 14-இல் டிரைலர் வெளியான நிலையில் செப்டம்பர் 6 -இல் இப்படம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால், தேதி குறிப்பிடாமல் படத்தை ஒத்திவைப்பதாகப் படக் குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

"சென்சார் அமைப்பிடமிருந்து படத்தின் சான்றிதழுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். படத்தின் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களின் புரிதலுக்கும், பொறுமைக்கும் நன்றி' என்று கங்கனா ட்வீட்டும் செய்திருந்தார்.

இந்த நிலையில் சென்சார் போர்டு "யு ஏ' சான்றிதழை வழங்கி இருக்கிறது. இதற்கு முன் சென்சார் போர்டு சில காட்சிகளை நீக்கவும், சர்ச்சைக்குரிய வரலாற்று அறிக்கைகளுக்கு உண்மையான ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது.

அதாவது இந்தியப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இடம்பெற்றிருந்த வசனங்கள், பாகிஸ்தான் வீரர்கள் வங்கதேச அகதிகளைத் தாக்குவது மாதிரியான காட்சிகள், ஆபரேஷன் ப்ளூஸ்டார் பற்றிய உண்மையான புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது போன்ற 10 இடங்களில் சில விஷயங்களை மாற்றவும், 3 இடங்களில் காட்சிக்களை நீக்கவும் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கை விட்ட காதல் - மனம் திறந்த தமன்னா!

2006 -இல் "கேடி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை தமன்னா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்.

விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் கடந்த வருடம் வெளியான ரஜினியின் "ஜெயிலர்' படத்தில் உள்ள "காவாலா' பாடல் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருந்தார். பிறகு சுந்தர்.சி யின் அரண்மனை

4-ஆம் பாகத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து பாலிவுட் படங்கள், வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். தவிர, அவர் இப்போது விஜய் வர்மா என்ற நடிகரைக் காதலித்து வருகிறார். இருவரும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தமன்னா இது குறித்து பேசியிருக்கிறார்.

'உங்கள் பார்ட்னரின் குணாதிசயங்களை நீங்கள் மாற்ற வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என்பது அவர்களைக் கட்டுப்படுத்துவது போன்றது.அதுபோல ரிலேஷன்ஷிப்பில் பொய் சொல்வது என்பதும் இருக்கக் கூடாது.

சிறிய அளவிலான பொய்களைக் கூட சொல்லக் கூடாது. நீங்கள் காதலிக்கும் பெண் சொல்வதைக் கேளுங்கள். அவர்களுக்கு எதாவது பிரச்னை என்றால் காது கொடுத்துக் கேளுங்கள். எல்லா நேரங்களிலும் அவர்கள் உங்களிடம் தீர்வை தேடி வருவதில்லை. அவர்கள் சொல்வதை கேட்பதற்கு ஒரு நபர் தேவை. அதனைப் புரிந்துகொண்டு அவர்களின் பிரச்னைகளைக் கேளுங்கள்'' என்றார் தமன்னா.

அவர் சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட ஹார்ட் - பிரேக் குறித்தும் பகிர்ந்த அவர், 'எனக்கு யாராவது கிஃப்ட் தந்தால் கோபம் வரும். ஏனென்றால் கிஃப்ட் கொடுப்பது என்பது ஒருவரை ஒரு பொருளுக்குள் அடக்குவது போன்றது. அது ரிலேஷன்ஷிப்பிற்கு விலை நிர்ணயம் செய்வது போல இருக்கும்.

நான் ஒரு ரிலேஷன்ஷிப்புக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னுடைய காதலை வெளிப்படுத்துவேன்.அனைவருக்கும் தெரியவரும். ஆனால் இதைச் சொன்னால் கோபப்படுவார்.

அந்த ஒரு நபருக்காக எல்லாத்தையும் நான் விட வேண்டுமா? என்று நான் யோசித்தேன்.வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் அனுபவிக்க வேண்டியதிருக்கிறது என்று நினைத்தேன். தவிர இரண்டாவது ஹார்ட் பிரேக் கொஞ்சநாள் கழித்து நடந்தது.

அந்த ஹார்ட் பிரேக்கை பொறுத்தவரை அந்த நபர் என்னுடைய வாழ்க்கையில் நல்ல விஷயங்களைக் கொடுக்கவில்லை. அதனால் அந்த காதலையும் கைவிட்டுவிட்டேன்'' என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் தமன்னா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

SCROLL FOR NEXT