தினமணி கதிர்

தினம் ஒரு திருக்குறள்

தினமும் ஒரு திருக்குறளைக் கூறி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார் பதிமூன்று வயது மாணவி தீக்ஷா.

சி. சுரேஷ்குமார்

தினமும் ஒரு திருக்குறளைக் கூறி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார் பதிமூன்று வயது மாணவி தீக்ஷா.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட நித்திரவிளை அருகே ஏலாக்கரையைச் சேர்ந்தவர் ஜோணி அமிர்தஜோஸ், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்மிதா, தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது மகள் தீக்ஷா தினம் ஒரு திருக்குறள் சொல்லி, சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதுகுறித்து ஸ்மிதா கூறியதாவது:

'எனக்கு தீரஜ், தீக்ஷா என இரு பிள்ளைகள். நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திக்ஷா 7 -ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். மகன் தீரஜ் சில ஆண்டுகளுக்கு முன் திருக்குறளை இசையமைத்து பாடி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தபோது, திருக்குறளை ஒளிப்பதிவு செய்ய தீக்ஷா உதவி செய்து வந்தார்.

2021 பிப்ரவரி 10 - ஆம் தேதி முதல் தொடர்ந்து 1330 நாள்கள் 'தினம் ஒரு திருக்குறள்' என்ற தலைப்பில் திருக்குறளைச் சொல்லி, முகநூல், வாட்ஸ் ஆஃப் குழுக்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவேற்றி வந்தார்.

தினமும் முதலில் 'குறள் வணக்கம்' என்றும், அதைத் தொடர்ந்து 'இன்றைய திருக்குறள்' எனவும் சொல்லி, திருக்குறள் வரிசை எண் கூறி அதன் பின்னரே திருக்குறளை கூறுவாள். 2025 ஜனவரி 15-இல் திருவள்ளுவர் தினத்தன்று 1330 -ஆவது திருக்குறளை கூறி நிறைவு செய்தார்.

இதையறிந்த தமிழ்நாடு காவல் தொலைத் தொடர்பு பிரிவு உதவி ஆய்வாளர் ஆஸ்வால்ட் ஹோப்பர், அன்னை தெரசா அறக்கட்டளை தலைவர் என்.எம். பிரேம்ராஜ், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் வங்கனூர் சீனிவாசன், கிராமிய பாடகர் கண்டன்விளை ராஜேந்திரன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் தீக்ஷாவை பாராட்டினர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இளையபெருமாள்நல்லூர் தமிழ் அமுது அறக்கட்டளை தீக்ஷா வின் கலைப்பணியை பாராட்டி, 'தேசிய ஒளிச்சுடர் விருது' வழங்கியது.

'ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்டு' என்ற உலக சாதனை அமைப்பும் இந்தச் சாதனையை அங்கீகரித்துள்ளது' எப்படி இவளால் எல்லா குறளையும் படிக்க முடிஞ்சது' என்று, எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளியின் மற்ற மாணவர்களுக்கும் வந்து போகிறது வியப்பு. 10 குறள்கள் படிக்க, பெரிய வகுப்பு மாணவர்களே தலையை உருட்டுவார்கள்.

ஆனால், அனைத்துக் குறள்களையும் மனப்பாடமாகச் சொல்வதோடு, குறள்களுக்குத் தெளிவுரையும் சொல்கிறார். கட்டாயப்படுத்தி சொல்லிக்கொடுக்கக் கூடாது.

விளையாடும்போது சொல்லிக்கொடுத்தா, மனசுல ஈஸியா எடுத்துக்குவாங்க. முதல்ல, ல,ள எழுத்து உச்சரிப்பை சரியா சொல்லிக்கொடுத்துட்டு, குறளை ரெக்கார்டு பண்ணிப் போட்டுவிட்டுட்டா, மனப்பாடம் ஆகிடும். முதல் வார்த்தையை எடுத்துக்கொடுத்தா போதும் எந்தக் குறளா இருந்தாலும் சொல்லிடுவாங்க. நம்பர் சொன்னா, குறள் சொல்ல பயிற்சி எடுத்துக்கிட்டிருக்காங்க' என்கிறார் ஸ்மிதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவாடை உற்சவம்

தோளப்பள்ளி, குருவராஜபாளையத்தில் கிராம சபைக் கூட்டம்

விஜிலாபுரம் அரசு மதுக்கடையை அகற்ற கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

பொதுப் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா்

155 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

SCROLL FOR NEXT