தினமணி கதிர்

சிரி... சிரி...

அக்கா... கை மாத்தா ஆயிரம் ரூபாய் தாங்களேன்?

தினமணி செய்திச் சேவை

'அக்கா... கை மாத்தா ஆயிரம் ரூபாய் தாங்களேன்?'

'என்னம்மா... கையில் மருதாணி வச்சிருக்கேனே... நாளைக்கு வா பார்க்கலாம்!'

-பண்ருட்டி பரமசிவம்



'சார்... என் கல்யாணத்துக்கு விவசாயக் கடன் வேணும்...?'

'அது எப்படி முடியும்...?'

'கல்யாணம்தான் ஆயிரம் காலத்துப் பயிராச்சே... '

-கீதா சீனிவாசன், சென்னை-63.



'என்னங்க... இவ்ளோ கடன் வாங்கி வைச்சிருக்கீங்க?'

'எல்லாம் உன்னைக் காதலிக்கும்போது வாங்கினதுதான்.'

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.



'ஹலோ சார்.... ராமசாமி இருக்காரா?'

'உங்களுக்கு யார் வேண்டும்...ப்யூன் ராமசாமியா, மானேஜர் ராமசாமியா?'

'என்கிட்ட பத்து லட்சம் கடன் வாங்கின ராமசாமி!'



'தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை 'கடன்'தான்...'

'அப்போ எனக்கு ஐந்தாயிரம் ரூபாய் கைமாத்தா கொடுங்க சார்...'



'அந்தாளு உங்களைச் சகட்டுமேனிக்கு திட்டிட்டு போறான்... நீங்க சிரித்தபடி பதில் பேசாமல் இருக்கீங்க?'

'கொடுத்த கடனைத் திருப்பி வாங்குற வரைக்கும் அப்படியே இருந்தாகணும் சார்'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.



'என் பையன் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினானா? எதுக்காக வாங்கினான்?'

'ஆமாம் சார்... ஏதோ பேஸ்புக் வாங்கணும்னு சொன்னான்... அதான் கொடுத்தேன்'



'வாழ்க்கையில் தற்கொலை தீர்வாகாது... எதையும் மனசை விட்டு பேசணும் சார்...'

'சரிங்க... ரெண்டு லட்சம் ரூபாய் கடன் தாங்க?'



'பேங்கில் பத்து லட்சம் இருக்கு'

'அப்படியா... எனக்கு ரெண்டு லட்சம் கடன் தாங்களேன்.'

'நான் சொன்ன பத்து லட்சமும் கடன்தான்.'



'உங்களோட மாட்டை கட்டிப் போட மாட்டீங்களா? அது எங்க வீட்டு தோட்டத்துல வந்து மேயுது?'

'அது லோனில் வாங்கின மாடு... மாதம் ஒருமுறை கட்டினால்போதுமுன்னு பேங்க் மேனேஜர் சொன்னாரு!'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'அவன்கிட்ட கடன் கொடுத்தா மறந்துடணும்...'

'ஏன் அப்படி?'

'பழைய கடனோடு சேர்த்து தர்றேன்னு மீண்டும், மீண்டும் கடன் கேட்பான். அதனாலே விட்டுடணும்...'

-தமிழ், பேரணாம்பட்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

SCROLL FOR NEXT