'எண்பது மார்க் வரும்னு சொன்னே... ஆனா எட்டு வாங்கி இருக்கே..?'
'சைபரை அவாய்டு பண்ணிட்டேன்!'
' தலையில் அடித்து சத்யம் செய்யவா..?'
'இரு. ஹெல்மெட்டை மாட்டிக்கிறேன்..'
- ஏ. நாகராஜன், பம்மல்.
'மாப்பிள்ளை குடிகாரன்ற விஷயம் பொண்ணு பார்க்க வந்த அன்னிக்கே தெரிஞ்சுப் போச்சு!'
'எப்படி?'
'சைட் டிஷ்க்கு பஜ்ஜி நல்லா இருக்கும்னு சொல்லி பார்சல் வாங்கிட்டுப் போயிட்டாரே!'
-தீபிகா சாரதி, சென்னை -5.
'காட்டுக் கத்தலா என்ன பாட்டு பாடுறார்?'
'ஜங்கிள் சாங்...'
- பர்வதவர்த்தினி, பம்மல்.
'வேலை செய்யுற இடம் கோயில் மாதிரின்னு சொன்னாங்க...'
'ஆமா... அதுக்கு என்ன?'
'நான் கோயிலுக்குப் போற மாதிரி வாரத்துக்கு ஒரு நாள் வேலைக்குப் போனேன்... அதுக்கு மேனேஜர் திட்டுறார்!'
'என்னங்க! உங்க பையனுக்கு ஆறு தோசை சுட்டு போட்டேன்... ஆனால், அவன் நாலு தோசைதான்கிறான்!'
'சரி சரி விடு... அவனுக்கு சுட்டு போட்டாலும் கணக்கு வராது!'
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
'நடுராத்திரியில வந்து காபி பவுடர் இரவல் கேக்கறியே?'
'என் கணவருக்கு தூக்கத்துல பெட் காபி குடிக்கிற வியாதி இருக்குதே!'
'சர்க்கரை 170 இருக்குன்னு சொன்னா சந்தோஷப்
படுறீங்களே, ஏன்?'
'பக்கத்து வீட்டுக்காரிக்கு 180 இருக்காம்... அவளை விட நான் பெட்டர் தானே டாக்டர்?'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'என்ன புலவரே... பரிசைப் பெற்றுக்கொண்டீரா?'
'90% கேளிக்கை வரி விதிப்பதெல்லாம் அநியாயம், மன்னா!'
'அதென்ன தவழும் படை?'
'எதிரியை தூரத்தில் பார்த்ததும் தவழ்ந்து போய் அவன் காலில் விழுவார்கள்!'
'என்ன, பொதுக்கூட்டத்துல இடைவேளை
விடறாங்க?'
'தலைவர் சினிமாலேர்ந்து வந்தவராச்சே!'
'கிளினிக்லேர்ந்து எதுக்கு கால் பண்ணாங்க?'
'டாக்டர் ஃப்ரீயா இருக்கிறாராம்... செக்கப்புக்கு வர்றீங்களான்னு கேட்குறாங்க!'
-அ.ரியாஸ், சேலம்.
'எல்லா வேலையிலும் என் மனைவி எனக்கு உதவியா இருப்பா...'
'அப்படியா?'
'ஆமா... நான் கோலம் போடும்போது, கூடயிருந்து கலர் பொடிகளை ஒவ்வொண்ணா எடுத்துத் தருவா!'
'கடவுளா பார்த்து உங்களை இப்ப அனுப்பியிருக்கிறாரு, சார்!'
'ஏன் சிஸ்டர்... எதுவும் சீரியஸா?'
'ஆமா சார்... யாராவது வந்தால்தான் உனக்கு சம்பளம்னு டாக்டர் சொல்லிட் டாரு!'
'ஜில்லுனு என்னப்பா இருக்கு?'
'காபி, டீ மட்டும்தான் சார் இருக்கு... எது வேணும்?'
-வி.ரேவதி, தஞ்சை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.