தினமணி கதிர்

கார்மோரான்ட்...

ஒருகாலத்தில் ஆசியாவில் திறந்தவெளி, சமவெளிகளில் பொதுவாகத் தென்பட்ட பறவை 'கார்மோரான்ட்'.

ராஜிராதா

ஒருகாலத்தில் ஆசியாவில் திறந்தவெளி, சமவெளிகளில் பொதுவாகத் தென்பட்ட பறவை 'கார்மோரான்ட்'. அதன் தனித்துவமும், கண்கவர் வண்ணங்களும் பார்ப்போரை ரசிக்க வைக்கும். 'லெஸ்ஸர் ஃப்ளோரிகன்' என்று அழைக்கப்படும் கார்மோரான்ட் பறவை இனம் குறைந்துவருகிறது.

கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே காணப்படும் பறவையாகி விட்டது. மொத்தமே 400 எண்ணிக்கையில்தான் உள்ளதால், சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியமும் இதை மிகவும் ஆபத்தான பட்டியலில் உள்ள பறவையாகச் சேர்த்துள்ளது.

பந்தன் வாடா, ஷோகாலியா, பினாய், அருகிலுள்ள புல்வெளிகள்தான் இருப்பிடங்கள். இவை புல்லின் கீழ் அல்லது வயல்களில் கூடு கட்டுகின்றன. இனப் பெருக்க காலம் பருவ மழையுடன் நடக்கிறது. ஆண் பறவைகள் பெண் பறவைகளை ஈர்க்கவும் போட்டியாளர்களை விரட்டவும் உயரமாகக் குதிக்கின்றன. இந்த நேரத்தில் இறகுகள் வண்ணமயமாகின்றன.

'ஆண் பறவைகள் தலைக்குப் பின்னால் மடிந்த இறகுகளை வளர்த்துகொள்கின்றன. அவற்றின் உடல்கள் கருப்பு வெள்ளை, பழுப்பு நிற கலவையாக மாறுகிறது. ஆண் பறவைகள் துடிப்பானவர்களாக மாறினாலும் பெண் பறவைகள் சாதாரணமாகவும் சிறியதாகவும் இருக்கின்றன.

இவைகளுக்கு மக்களிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் பல சங்கடங்கள் உண்டு. பருவ மழைக்கு பிறகு விவசாய நடவடிக்கைகள் தொடங்கும்போது பறவையின் மறைந்திருக்கும் கூடுகள், முட்டைகள் அழிக்கப்படுகின்றன. டிராக்டர்கள், இயந்திரங்கள் மூலம் வயலிலுள்ள வாழ்விடங்கள் நசுக்கப்படுகின்றன.

கூடுதலாக நரிகள், கீரிகளும் இவற்றின் முட்டைகளை வேட்டையாடுகின்றன. கார்மோன்கள் மனிதர்கள் வாழும் இடங்களை தவிர்க்கின்றன.அத்துடன் அவை அதிக உணர்திறன் கொண்டவை' என்கிறார் பறவையின ஆய்வாளர் டாக்டர் அபித் அலிகான்.

இந்தப் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நம்பிக்கையை ராஜஸ்தானின் அஜ்மீர் அருகேயுள்ள 'அர்வாட்' எனும் கிராமமே அளிக்கிறது. இங்கு ஒரு சிறப்பு இனப் பெருக்க மையம் கட்டப் பட்டுள்ளது. உயிரினங்களுக்கு உயிர் நாடியாக அமைந்துள்ள இந்த மையத்தை இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் நிர்வகித்து வருகின்றனர்.

ஒவ்வொரு கட்டத்திலும் பறவைகளின் வாய்ப்பை அதிகரிக்கும்படியான அறிவியல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்படியே முட்டைகளைப் பாதுகாத்தல், குஞ்சுகளை அடைகாத்தல், அவற்றை பறக்கவிடுதல் போன்ற பணிகளை இந்த மையம் மேற்கொண்டுவருகிறது. இனப் பெருக்க காலத்தில் இவற்றின் தாயகமாக அஜ்மீர் மாவட்டம் உள்ளது.

தற்போது இந்தப் பகுதி கிராமவாசிகள் கூடுகளைப் பாதுகாக்கவும், வேட்டையாடுபவர்களைத் தடுக்கவும் கூண்டுகளை அமைக்கவும் வனத்துறையுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளனர். செயற்கை இனப் பெருக்கம் இந்தப் பறவைக்கு புது வாழ்வை அமைத்தத் தருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஸா: பட்டினிச் சாவு 154-ஆக உயா்வு

பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 சிறாா்களின் கல்விச்செலவை ஏற்கிறாா் ராகுல்!

தனியாா் ஆலை ஊழியா்களுக்கு வாந்தி, மயக்கம்

5 ஆண்டுகளில் 667 புலிகள் இறப்பு - மகாராஷ்டிரத்தில் அதிகம்

SCROLL FOR NEXT