தினமணி கதிர்

இயற்கையின் வரம்...

இயற்கை வழங்கிய வரம்தான் நீர்வீழ்ச்சிகள். நடுத்தர உயரத்திலிருந்து அல்லது மிக உயர மலை உச்சியிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் கண்களையும் மனங்களையும் கவரும்.

சக்ரவர்த்தி

இயற்கை வழங்கிய வரம்தான் நீர்வீழ்ச்சிகள். நடுத்தர உயரத்திலிருந்து அல்லது மிக உயர மலை உச்சியிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் கண்களையும் மனங்களையும் கவரும்.

ஏஞ்சல் நீர்வீழ்ச்சி: உலகின் 'மிக உயரமான நீர்வீழ்ச்சி' என்ற பெருமையை ஏஞ்சல் நீர்வீழ்ச்சி பெற்றுள்ளது. மலைக்க வைக்கும் இயற்கை அழகு காட்சிகளைக் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி 979 மீ. (3212 அடி ) உயரத்திலிருந்து விழுகிறது. தென் அமெரிக்காவில் வெனிசுலாவின் வனப் பகுதியில் உள்ள கனைமா தேசிய பூங்காவில் அமைந்துள்ளது.

நீர் ஆயன்டெபுய் என்ற மேசை போன்ற சமதள மலையிலிருந்து பாய்கிறது. மேலே இருந்து வழுக்கும் தண்ணீர் அடிவாரத்தை அடைவதற்குள் அந்தப் பகுதி முழுவதும் மூடுபனி மூடியிருப்பதை போன்ற பரவச காட்சியை ஏற்படுத்துகிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சுற்றுலாத் தலமாகவும், வெனிசுலாவின் மிக முக்கியமான இயற்கை அடையாளங்களில் ஒன்றாகவும் உள்ளது. நயாகரா நீர்வீழ்ச்சியைவிட ஏஞ்சல் நீர்வீழ்ச்சி 20 மடங்கு உயரமானது.

1933இல் தங்கத்தைத் தேடி பயணித்த ஜிம்மி ஏஞ்சல் முதன்முதலில் அதன் மீது விமானத்தில் பறந்து சென்றார். நீர்வீழ்ச்சியின் அழகை பறவைப் பார்வைக் கோணத்தில் கண்டு ரசித்தார். ஜிம்மியின் புகழ் சூட்டுதலே உலகுக்கு அறிமுகம் செய்தது. அதனால், ஜிம்மி ஏஞ்சலைக் கெளரவிக்க 'ஏஞ்சல் நீர்வீழ்ச்சி' என்று பெயரிடப்பட்டது.

துகேலா நீர்வீழ்ச்சி: தென் ஆப்பிரிக்காவின் குவாசுலுநடால் மாநிலத்தில் உள்ள ராயல் நடால் தேசிய பூங்காவின் டிராகன்ஸ்பெர்க்கில் (டிராகன் மலைகள்) துகேலா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. துகேலா நதியின் ஒரு பகுதியான இந்த நீர்வீழ்ச்சி, உலகின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியாக அறியப்படுகிறது. துகேலா நீர்வீழ்ச்சி 948 மீட்டர் (3,110 அடி) உயரத்திலிருந்து விழுகிறது. மலையின் உச்சியிலிருந்து மலையைவிட்டுப் பிரிய மனமில்லாமல் தொட்டுத் தவழ்ந்தவாறே கோடாக இறங்குகிறது.

'கட்டறடா யும்பில்லா' நீர்வீழ்ச்சி: பசிபிக் கடலைப் பார்த்தபடி இளைப்பாறும் தென் அமெரிக்காவின் மிகப் பெரிய நாடான 'பெரு'வில் உள்ளதுதான் 'கட்டறடா யும்பில்லா' நீர்வீழ்ச்சி. உயரம் 896 மீட்டர் (2,940 அடி). இந்த நீர்வீழ்ச்சி அமேசான் மழைக்காடுகளின் தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ளது. உலகின் மூன்றாவது உயரமான நீர்வீழ்ச்சியாக இருந்தாலும், இன்றைக்கும் மக்களால் அதிகம் அறியப்படாத நீர்வீழ்ச்சியாகவே இருக்கிறது. அமைதியான சூழலுடன் இயற்கையை ரசிக்கும் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான விருந்தாக அமைந்துள்ளது.

புனேனா நீர்வீழ்ச்சி: அமெரிக்க மாகாணமான ஹவாய் பசிபிக் பெருங்கடலில், அமெரிக்க நிலப்பகுதியின் தென்மேற்கில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் ஆகும். முழுமையாக வெப்பமண்டலத்தில் அமைந்துள்ள ஒரே அமெரிக்க மாகாணமும் ஹவாய்தான். ஹவாயின் மோலோகை தீவில் அமைந்துள்ள ஓலோ'புனேனா நீர்வீழ்ச்சி சுமார் 900 மீட்டர் (2,953 அடி) உயரத்தில் இருந்து குதிக்கிறது. இந்த செங்குத்தாகப் பாயும் ஆனால் குறுகிய நீர்வீழ்ச்சி. உலகின் நான்காவது உயரமான நீர்வீழ்ச்சி, பசுமையான வெப்பமண்டல வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் புரூஸ் நீர்வீழ்ச்சி: 840 மீட்டர் (2,760 அடி) உயரத்தில், ஜேம்ஸ் புரூஸ் நீர்வீழ்ச்சி வட அமெரிக்காவின் உயரமான நீர்வீழ்ச்சியாகும். இது பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ளது. இது உலகின் ஐந்தாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும். இந்த நீர்வீழ்ச்சியின் ஒரு பிரிவு கனடா நாட்டிலும் பாய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உயரும் ஊட்டி பூண்டு விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

தாயகம் திரும்பியோருக்கான நிலப்பத்திரம் திரும்ப ஒப்படைப்பு

சிறுவா்கள் வாகனங்களை இயக்கினால் ரூ.25 ஆயிரம் அபராதம்

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் டிசம்பா் 1 வரை நீட்டிப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: செப் 19-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT